இருமுறை உடைந்த மேடை...! ரோபோ வீட்டு கல்யாணத்தில் கலாட்டா..!

இருமுறை உடைந்த மேடை...! ரோபோ வீட்டு கல்யாணத்தில் கலாட்டா..!
X
இந்த நிகழ்ச்சிக்கு கிட்டத்தட்ட 1.5 கோடி ரூபாய் வரை செலவாகி இருக்கலாம் என பலர் கருத்து தெரிவித்து வந்தாலும் அதுகுறித்த உறுதியான தகவலை ரோபாஷங்கர் குடும்பத்தின் தரப்பில் வெளியிடவில்லை.

சமீபத்தில் தனது மகளுக்கு பிரம்மாண்டமாக திருமணம் செய்து வைத்து, தனது கடமை ஒன்றை நிறைவு செய்துவிட்ட திருப்தியில் இருந்த ரோபோ ஷங்கர், தனது ஆனந்த கண்ணீரில் மூழ்கி, திருமண வரவேற்புக்கு வந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசியுள்ளார். அதில் சுவாரஸ்யமாக இரண்டு முறை மேடை உடைந்த நிகழ்வையும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

கமல்ஹாசனின் தீவிர ரசிகரான ரோபோ ஷங்கர், தனது ஆரம்ப கால வாழ்க்கையை மிகவும் ஏழ்மையிலேயே ஆரம்பித்து, பின் மேடை நாடகங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் என அடுத்தடுத்து தனது வாழ்க்கையில் முன்னேறிச் சென்றார் அவர். அவருடைய மகளும் இவரைப் போலவே சினிமாவில் அறிமுகமாக நல்ல கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

சினிமாவில் ரோபோ

தமிழ் சினிமாவில் தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படத்தில் சேர்ந்து நடித்துள்ளார் ரோபோ ஷங்கர். இவர் சினிமாவில் அடுத்தடுத்து நல்ல கதாபாத்திரங்களை செய்து கொண்டிருந்தபோது, திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட, மிகவும் நொடிந்துவிட்டார். திரையுலகமே பரபரக்கும் வகையில் அவரது உடல் எடை மிகவும் குறைந்து உடல் மெலிந்து காணப்பட்டார். அப்போதுதான் தனது மகளுக்கு சீக்கிரம் திருமணம் செய்து வைக்கத் திட்டமிட்டார். அதிலிருந்து மீண்டு வந்தவர், இந்திரஜாவுக்கு மிகவும் பிரம்மாண்டமாக இந்த திருமணத்தை நடத்தியிருக்கிறார்.

இந்திரஜா ரோபோஷங்கர் திருமணம்

நடிகை இந்திரஜாவுக்கு அவரது மாமாவுடன் மதுரையில் கடந்த மாதம் திருமணம் நடந்து முடிந்தது. அன்றிலிருந்து இன்று வரை அவர்கள் டிரெண்டிங்கில் இருந்து வருகிறார்கள். திருமணத்தையும் தாண்டி சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

திருமணத்தின்போது தனது உறவினர்கள், நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் அழைப்பு விடுத்திருந்த ரோபோ ஷங்கர் குடும்பம், திரையுலகைச் சேர்ந்தவர்களுக்கு தனியே வரவேற்பு வைத்தார்கள். கிட்டத்தட்ட 3000 பேருக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், 9000 பேர் இந்த திருமண வரவேற்புக்கு வருகை தந்து மொத்த குடும்பத்தையும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள்

எதிர்பார்த்ததைவிட அதிகமானோர் வருகை தந்ததால் சற்று சிரமம் ஏற்பட்டது என்றாலும், அதனை திறம்பட சமாளித்து அனைவரது மனமும் திருப்தியடையும்படி நடத்திக் காட்டிவிட்டனர் என பாராட்டியுள்ளார். நிகழ்ச்சியை நடத்த அமர்த்தப்பட்ட அணி சிறப்பாக துரு துருவென ஓடி ஆடி வேலைப் பார்த்ததாகவும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் தெரிவித்திருந்தனர். மூன்று முறை உடனுக்குடன் மேடை அமைத்து சிறப்பாக நடத்திவிட்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு கிட்டத்தட்ட 1.5 கோடி ரூபாய் வரை செலவாகி இருக்கலாம் என பலர் கருத்து தெரிவித்து வந்தாலும் அதுகுறித்த உறுதியான தகவலை ரோபாஷங்கர் குடும்பத்தின் தரப்பில் வெளியிடவில்லை.

கடுமையான விமர்சனங்கள்

இதுகுறித்து பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். காரணம் இந்த ஆடம்பரமான செலவுகள்தான். இது தேவையா என்பது போல பலரும் பேசியுள்ள நிலையில், இதுகுறித்து ரோபோ ஷங்கர் தனது நெருக்கமான ஒருவருக்கு அளித்த பதில் தற்போது தெரியவந்துள்ளது.

அதாவது அந்த நெருக்கமான நண்பரும் இத்தனை லட்சங்கள் செலவு செய்து திருமணம் செய்வது அவசியமா என்பது போல கேட்டிருப்பார் போல. அதற்கு பதிலளித்த ரோபோ, தான் மிகவும் அடித்தட்டிலிருந்து இந்த இடத்துக்கு வந்திருப்பதாகவும், இடையில் உடல் நிலை சரியில்லாமல் போனபோது கிட்டத்தட்ட செத்து பிழைத்து வந்தேன் எனவும் வாழ்க்கையை மீட்டு எடுத்திருக்கிறேன் எனவும் சொல்லியிருக்கிறார்.

ஏன் எரிகிறது?

இந்த மாதிரி சமயத்தில்தான் எனது மகளின் திருமணத்தை மிகப்பெரிய அளவில் நடத்த வேண்டும் என முடிவு செய்து நடத்தி முடித்தேன். இது என்னுடைய பர்சனல் விசயம், உங்களுக்கு ஏன் எரிகிறது என்பது போல பேசியிருக்கிறார். இதைப் போலவே ஒரு பதிவையும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருந்தார் ரோபோ.

இந்த பதிலைப் பார்த்தவர்கள் அப்படியே வாயடைத்துப் போனார்கள். வேண்டும் என்றே அடுத்தவர் வாழ்க்கையில் மூக்கை நுழைக்கும் நபர்களுக்கு இப்படித்தான் நோஸ் கட் செய்து விட வேண்டும் என பலரும் இவரது பதிலை ஊக்குவிக்கும் வகையில் பதிவிட்டிருந்தனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!