முல்லைப் பெரியாறிலிருந்து 18ம் கால்வாயில் இன்று தண்ணீர் திறப்பு

முல்லைப் பெரியாறிலிருந்து 18ம் கால்வாயில் இன்று தண்ணீர் திறப்பு
X

லோயர்கேம்ப் முல்லை பெரியாற்றில் இருந்து பதினெட்டாம் கால்வாயில் கலெக்டர் முரளிதரன் தண்ணீர் திறந்து வைத்தார்.

முல்லை பெரியாறிலிருந்து 18ம் கால்வாயில் மாவட்ட கலெக்டர் தண்ணீர் திறந்து வைத்தார்.

தேனி மாவட்டம், கம்பம் அருகே கூடலூர் லேயர்கேம்ப் முல்லை பெரியாறிலிருந்து 18 ம் கால்வாயில் பாசனத்திகாக இன்று முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. மாவட்ட கலெக்டர் முரளிதரன் முல்லைப் பெரியாற்றில் இருந்து வினாடிக்கு 98 கன அடி தண்ணீர் வீதம் 30 நாட்களுக்கு தண்ணீரை திறந்து வைத்தார்.

இந்த தண்ணீர் திறப்பதன் மூலம் தேவாரம் பகுதியில் 44 கண்மாய்கள் நிரம்பி, 4614. 25 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். உத்தமபாளையம் தாலுகாவில் 21 கண்மாய்கள் நிரம்பி 2045.35 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.

போடிநாயக்கனூர் தாலுகாவில் 23 கண்மாய்கள் நிரம்பி 2568.90 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி, பண்ணைப்புரம், கோம்பை, தேவாரம், மினாட்சிபுரம் டொம்புச்சேரி உள்ளிட்ட 13 கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் உயரும்.

இந்நிகழ்ச்சியில் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ., கௌசல்யா மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் 18 ம் கால்வாய் விவசாய சங்கத்தினர், பொதுப்பணித் துறை அதிகாரிகள், தி.மு.க., வடக்கு மாவட்ட செயலாளர் தங்க.தமிழ்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil