ரேஷன் கடையை பூட்டி சீல் வைத்த குள்ளப்பகவுண்டன்பட்டி தலைவர்
குள்ளப்பகவுண்டன்பட்டி பஞ்சாயத்து தலைவர் பொன்னுத்தாய்.
தேனி மாவட்டம், கூடலுார் அருகே உள்ள குள்ளப்பகவுண்டன்பட்டியில் பொதுமக்கள் வசதிக்காக 7ம் நம்பர் ரேஷன் கடை செயல்பட்டு வந்தது. இந்த கடையில் மேற்கூரை சேதம் அடைந்ததால் தற்காலிகமாக சமூதாயக்கூடத்தில் செயல்பட்டு வருகிறது. கடைக்கு வந்த ஊராட்சி தலைவர் பொன்னுத்தாய் கடையை பூட்டி சீல் வைத்தார். இச்சம்பவம் தொடர்பாக கூட்டுறவுத்துறை அதிகாரிகளும், வழங்கல் துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து ஊராட்சி தலைவர் பொன்னுத்தாய் கூறியதாவது: ரேஷன் கடையில் தரமற்ற பொருட்கள் வழங்குவதாக மக்கள் எங்களிடம் புகார் கூறுகின்றனர். அரிசியை வெளி மார்க்கெட்டில் மூடை 600 ரூபாய்க்கு விற்று விடுகின்றனர். மக்களுக்கு தரமற்ற அரிசி அதுவும் எடை குறைவாக வழங்குகின்றனர். எண்ணெய், பருப்பு வகைகள் மிகவும் கூடுதல் விலைக்கு விற்கின்றனர்.
இது குறித்து பலமுறை நாங்கள் அதிகாரிகளிடம் புகார் செய்தும் பலன் இல்லை. இங்கு நாங்கள் வந்து பார்த்தோம். அரிசி மூடை எதுவும் இல்லை. இது எங்களின் சமுதாயக்கூடம். இங்குள்ள நல்ல அரிசியை விற்று விட்டனர். எனவே தரம் குறைந்த அரிசி மட்டும் உள்ளது. இதனை கடத்தி விடக்கூடாது என்பதற்காக வெல்டிங் வைத்து கதவை பூட்டி உள்ளோம் என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu