கம்பத்தில் திருடனை பிடித்துக் கொடுத்த வாலிபர்களுக்கு போலீசார் பரிசு

கம்பத்தில் திருடனை பிடித்துக் கொடுத்த  வாலிபர்களுக்கு போலீசார் பரிசு
X

கம்பம் பகுதியில், திருடனை பிடித்துக் கொடுத்த வாலிபர்கள் சிவனாண்டி, பாண்டியராஜன் ஆகியோருக்கு இன்ஸ்பெக்டர் லாவண்யா பரிசு வழங்கி பாராட்டினார்.

கம்பம் பகுதியில், திருடனை விரட்டி பிடித்து போலீசிடம் ஒப்படைத்த வாலிபர்களை, போலீசார் பாராட்டி பரிசு வழங்கினர்.

தேனி மாவட்டம், கம்பம் அருகே காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் சூர்யபிரபா, 31. இவர் கம்பத்தில் தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார். பள்ளிக்கு இன்று காலை நடந்து சென்ற போது, அந்த வழியாக டூ வீலரில் வந்த கம்பத்தை சேர்ந்த விக்னேஷ், 26, ஆசிரியையிடம் செயின் பறிக்க முயன்றார். முடியாததால் அவர் கையில் வைத்திருந்த மொபைலை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார்.

அப்போது, எதிரே நடந்து வந்து கொண்டிருந்த கம்பத்தை சேர்ந்த சிவனாண்டி, 30, பாண்டியராஜன், 24, ஆகியோர் திருடனை விரட்டிப்பிடித்து, கம்பம் போலீசில் ஒப்படைத்தனர். இன்றுமாலை இரண்டு வாலிபர்களையும் அழைத்த இன்ஸ்பெக்டர் லாவண்யா , இருவரது வீரச்செயலையும் பாராட்டி தலா 500 ரூபாய் பரிசு வழங்கி பாராட்டினார்.

Tags

Next Story