கம்பம் 18ம் கால்வாயி்ல் பனை நடவு செய்த சமூக நல்லிணக்கக்குழுவினர்

கம்பம் 18ம் கால்வாயி்ல் பனை நடவு செய்த சமூக நல்லிணக்கக்குழுவினர்
X

கம்பம் 18-ம் கால்வாய் கரைகளில், பனை விதைகளை நட்ட சமூக நல்லிணக்க குழுவினர்.

தேனி மாவட்டம் கம்பம் 18ம் கால்வாயில் ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

தேனி மாவட்டம், கம்பம் பகுதியில் உள்ள சிவனடியார்கள் திருக்கூட்டம், அதாயி அரபிக்கல்லுாரி மாணவர்கள் இணைந்து, 18ம் கால்வாயில், பனைமர விதைகளை நடவு செய்தனர்.

இதில், சிவயோகி சிவமுருகன், அதாயி அரபிக்கல்லுாரி முதல்வர் தாரிக் அகமது, தன்னார்வலர்கள் யாசர் அராபத், சங்கர், அலீம், ஆசிரியர் பாண்டியன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த நிகழ்வில், ஆயிரம் பனை விதைகள் நடவு செய்யப்பட்டன. நுாற்றுக்கும் மேற்பட்ட மரங்களில் அடிக்கப்பட்டிருந்த ஆணிகளை, தன்னார்வலர்கள் அகற்றினர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!