தேனி அருகே மருமகள், பேரன் மீது தீ வைத்த கொடூர மாமனார் கைது

தேனி அருகே மருமகள், பேரன் மீது தீ வைத்த  கொடூர மாமனார் கைது
X
வரதட்சணை கொடுக்காததால் மருமகள், பேரன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த மாமனாரை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் கம்பம் அருகே நாராயணதேவன்பட்டியை சேர்ந்த பெரியகருப்பன்- ஒச்சம்மாள் தம்பதியின் மகன் அருண்பாண்டி (வயது23. ).இவர் திராட்சை தோட்ட வேலை செய்கிறார். இதே ஊரை சேர்ந்த நர்ஸ் சுகப்பிரியாவை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு யோகேஸ் என்ற இரண்டு வயது குழந்தை உள்ளது.

சுகப்பிரியாவை அவரது மாமனார் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்தனர். இந்நிலையில் பெரியகருப்பன் தனது மருமகள் சுகப்பிரியா, பேரன் யோகேஸ் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்தார். இதில் பலத்த தீக்காயமடைந்த யோகேஸ் இறந்தான். சுகப்பிரியா பலத்த காயத்துடன் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தேனி மாஜிஸ்திரேட்டிடம் சுகப்பிரியா அளித்த வாக்குமூலத்தில், 'என்னை வரதட்சணை வாங்கி வரும்படி மாமனார் பெரியகருப்பன், மாமியார் ஒச்சம்மாள், நாத்தனார் கனிமொழி, கணவன் அருண்பாண்டியன் கொடுமை செய்தனர்' என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த ராயப்பன்பட்டி போலீசார், பெரியகருப்பனை கைது செய்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!