தேனி - கொரோனா தொற்று பரவல் எதிரொலியாக சோதனை சாவடிகளில் எஸ்.பி ஆய்வு
தேனி மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகமாக இருப்பதன் காரணமாக மாவட்ட எல்லைகளில் அமைக்கப்பட்ட சோதனை சாவடிகளில் தேனி மாவட்ட சாவடிகளில் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
தேனி - திண்டுக்கல் மாவட்ட எல்லையான கெங்குவார்பட்டி பகுதியில் காவல்துறை சார்பில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களில் இருந்து வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டு தேனி மாவட்டத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
தேனிமாவட்டத்தில் பெரியகுளம் உட்கோட்டம் தேவதானப்பட்டி காவல் நிலையம், காட்ரோடு சோதனைச் சாவடி வாகனம் தணிக்கை செய்யும் இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய் சரண் தேஜஸ்வி நேரில் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கரன் , பெரியகுளம் வருவாய் கோட்டாட்சியர் சினேகா, காவல் துணை கண்காணிப்பாளர் முத்துக்குமார், வட்டாட்சியர் இளங்கோ, பெரியகுளம் நகராட்சி ஆணையாளர் அசோக்குமார், சுகாதார ஆய்வாளர் அசன் முகமது, கெங்குவார்பட்டி பேரூராட்சி செயல் அலுவலர், காவல் ஆய்வாளர்கள். சிறப்பு சார்பு ஆய்வாளர்கள், துப்புரவு பணியாளர்கள், மற்றும் தன்னார்வலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.
முன் களப்பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பு உபகரணங்களான முக கவசம் , கிருமி நாசினி வழங்கப்பட்டது. மேலும் அனைவருக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu