போடியில் ஆர்ப்பாட்டம் செய்த கட்டுமான தொழிலாளர்கள் 150 பேர் கைது

போடியில் ஆர்ப்பாட்டம் செய்த கட்டுமான தொழிலாளர்கள் 150 பேர் கைது
X

போடியில் ஆர்ப்பாட்டம் செய்த கட்டுமான தொழிலாளர்கள்.

போடியில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கட்டுமான தொழிலாளர்கள் 150 பேரை, போலீசார் கைது செய்தனர்.

போடியில், 150க்கும் மேற்பட்ட கட்டுமான தொழிலாளர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். கட்டுமான தொழிலாளர்களின் பணப்பயன்களை, பங்களிப்பு தொகையுடன் இணைக்க கூடாது, பென்சன் தொகையினை 3 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும், தொழிலாளர் நல வாரியத்திற்கான ஆன்லைன் பதிவு எளிமையாக்கப்பட வேண்டும், பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் பென்சன் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கட்டுமான தொழிலாளர்கள் போடியில் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மாவட்டதலைவர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் சண்முகம், மாவட்ட பொருளாளர் பிச்சைமணி, போடி சர்ச் கிளை தலைவர் செபஸ்தியார், செயலாளர் மதியழகன் உட்பட 150க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். இவர்களை போடி போலீசார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். இன்று மாலை 6 மணிக்கு விடுவிக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!