30 நாட்களில் கட்டடத்துக்கு அனுமதி கட்டாயம்
நாடு முழுதும் கட்டுமான திட்ட அனுமதி வழங்குவதில், சீரான முறையை ஏற்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, பி.ஐ.எஸ்., எனப்படும் இந்திய தர நிர்ணய ஆணையம் சார்பில், புதிய வரைவு கட்டட விதிகள் உருவாக்கப்பட்டு உள்ளன. மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறையுடன் இணைந்து, இந்த விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.
புதிய கட்டுமான திட்ட விண்ணப்பத்தை பெற்றதில் இருந்து, ஏழு நாட்களில், அதன் அடிப்படை தகுதியை ஆய்வு செய்ய வேண்டும். விண்ணப்பதாரரிடம் தேவையான கூடுதல் விபரங்களை பெற வேண்டும். அதன் மீதான தொழில்நுட்ப ஆய்வுகளை, 15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். இதில் மாற்றங்கள் செய்ய வேண்டிய தேவை இருந்தால், அது குறித்து விண்ணப்பதாரருக்கு தெரிவிக்க வேண்டும். இதையடுத்து, 30 நாட்களுக்குள் திட்ட அனுமதி குறித்த கடிதம், விண்ணப்பதாரருக்கு அனுப்பப்பட வேண்டும்.
இந்த வழிமுறைகள் பின்பற்றப்படாமல், 30 நாட்கள் வரை, எவ்வித தகவலும் அனுப்பாமல் இருந்தால், 45வது நாளில், அந்த விண்ணப்பத்தின் மீது சம்பந்தப்பட்ட துறை ஒப்புதல் அளித்ததாக கருதப்படும். அன்றே விண்ணப்பதாரர், கட்டுமான பணிகளை துவங்கலாம்.
மேலும் வரைவு விதிகளின்படி, 3,229 சதுர அடி வரை பரப்பளவுள்ள மனைகளில், ஒரே கட்டடமாக கட்டப்படும் குடியிருப்புகளுக்கு, பக்கவாட்டில் காலி இடம் விட தேவையில்லை; முன்புறம், பின்புறத்தில் மட்டும் காலியிடம் இருந்தால் போதும். இதே போன்று, 500 சதுர அடி வரையான மனைகளில், 49 அடி உயரம் வரை குடியிருப்பு கட்டடங்களை கட்டலாம். இதில் மனையில், 75 சதவீத இடத்தை, கட்டுமான பணிக்கு பயன்படுத்தலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu