இலவம் மரக்கன்றுகளை வனத்துறை வெட்டியதாக போலீசில் புகார்

இலவம் மரக்கன்றுகளை வனத்துறை வெட்டியதாக போலீசில் புகார்
X

இலவம் மரக்கன்றுகளை வெட்டியதாக வனத்துறையினர் மீது புகார் கொடுத்த மக்கள்.

நடவு செய்த இலவம் மரக்கன்றுகளை வனத்துறையினர் வெட்டி அழித்து விட்டதாக, நான்கு கிராம மக்கள், வனத்துறையினர் மீது போலீசில் புகார் கூறி உள்ளனர்.

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு - யானை கெஜம் வனப்பகுதியில், முத்தாலம்பாறை, உப்புத்துறை, ஆட்டுப்பாறை, ஆத்துக்காடு கிராமங்களை சேர்ந்த மக்கள், இலவம் மரக்கன்றுகளை நடவு செய்திருந்தனர். இந்த கன்றுகளை கண்டமனுார் வனத்துறையினர் அழித்து விட்டனர்.

வனத்துறையினரின் இந்த செயல்பாட்டினை கண்டித்து, தேனி கலெக்டர் முரளீதரனிடம் மக்கள் புகார் கொடுத்தனர். பின்னர் கடமலை மயிலை ஒன்றிய மார்க்சிஸ்ட் செயலாளர் போஸ் தலைமையில், கண்டமனுார் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் அதிகாரிகள் மனு மீது விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!