/* */

தேனி மாவட்டத்தில் தேங்காய் கிலோ 24 ரூபாய் விலை சரிவால் கவலை

தேனி மாவட்டத்தில் ஒரு கிலோ தேங்காய் விலை கிலோ 45 ரூபாயில் இருந்து 24 ரூபாய் ஆக சரிந்துள்ளது.

HIGHLIGHTS

தேனி மாவட்டத்தில் தேங்காய் கிலோ 24 ரூபாய் விலை சரிவால் கவலை
X

மாதிரி படம்

தேனி மாவட்டத்தில், பல லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. மாநில அளவில் தென்னை உற்பத்தியில் தேனி மாவட்டம் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. இங்கு விளையும் தேங்காய்கள் மாநிலத்தின் பல பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. கடந்த ஆண்டு ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர். நவம்பர், டிசம்பர் மாதங்களில் ஒரு கிலோ தேங்காய் (மட்டை மட்டும் நீக்கியது) கிலோ 45 ரூபாய் ஆக மொத்த மார்க்கெட்டில் விற்கப்பட்டது.

இது விவசாயிகளுக்கு ஓரளவு கட்டுபடியான விலையாக இருந்தது. தற்போது தென்னை விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் இருந்து தேங்காய் தமிழக மார்க்கெட்டுகளுக்கு வந்துள்ளது. இதனால் தமிழகத்தில் தேங்காய் விலை கிடுகிடுவென சரிந்துள்ளது. தேனி மாவட்டத்தில் ஒரு கிலோ தேங்காய் கிலோ (மட்டை மட்டும் நீக்கியது) 24 ரூபாய் ஆக விற்கப்படுகிறது.

இதனையும் வாங்க ஆள் இல்லை. நடுத்தர அளவு கொண்ட ஒரு தேங்காய் 9 ரூபாய் ஆக விற்கப்படுகிறது. இந்த தேங்காய் கடந்த ஆண்டு 18 ரூபாய் வரை விற்கப்பட்டது. பாதிக்கு பாதி விலை குறைந்துள்ளதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் விற்பனையும் கிடுகிடுவென சரிந்து பல லட்சம் தேங்காய்கள் விற்பனையாகாமல் தேங்கி கிடக்கின்றன. அரசு தேனி மாவட்டத்தில் அதிகளவி்ல் தேங்காய் கொப்பரை கொள்முதல் செய்ய வேண்டும் என தென்னை விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Updated On: 23 March 2022 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    போலரைஸ்டு சன்கிளாஸ்ல அப்படி என்னதான் ஸ்பெஷல்?
  2. திருப்பூர்
    திருப்பூா் தொகுதி தோ்தல் வாக்கு எண்ணும் பணி; 1,274 முகவா்கள் நியமனம்
  3. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் திடீர் கோடை மழை!விவசாயிகள் பெரு மகிழ்ச்சி!
  4. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  5. காஞ்சிபுரம்
    திருமுக்கூடல் ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  6. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  7. லைஃப்ஸ்டைல்
    ஆண்களுக்கான சரியான சன்கிளாஸ் தேர்வு செய்வது எப்படி?
  8. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
  9. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  10. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்