தரமற்ற நெல் விதை விற்பனை: உரக்கடைகள் மீது விவசாயிகள் புகார்

தரமற்ற நெல் விதை விற்பனை: உரக்கடைகள் மீது விவசாயிகள் புகார்
X

முதலமைச்சர் ஸ்டாலின் 

தரமற்ற நெல் விதைகளை வழங்கிய உரக்கடைகள் மீது, தமிழக முதல்வருக்கு சின்னமனுார் பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

தேனி மாவட்டம், சின்னமனுார், மார்க்கையன்கோட்டை, குச்சனுார், உப்பார்பட்டி, உப்புக்கோட்டை, கருங்குளம், வீரபாண்டி உள்ளிட்ட பகுதிகளில், பல ஆயிரம் ஏக்கர் பரப்பில் நெல் இரண்டாம் போக சாகுபடி நடைபெற்று வருகிறது. தனியார் உரக்கடைகளில் விற்பனை செய்யப்பட்ட வீரிய ரக நெல் விதைகளை (புண்ணியம், 999 என்ற வீரிய ரகம்) உள்ளிட்ட பல்வேறு ரகங்களை நடவு செய்துள்ளனர்.

இந்த ரக நெல் விதைகளில், பெரும்பாலானவை முறையான விளைச்சல் தரவில்லை. தற்போது நெல் கதிர்கள் பால் பிடிக்கும் பருவத்தில் உள்ளன. ஆனால் நெல் மணிகள் மிகவும் குறுகி காணப்படுகிறது. விளைச்சல் பாதிக்கப்படும் என அச்சம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தமிழக முதல்வருக்கு புகார் மனு அனுப்பி உள்ளதாக, விவசாயிகள் கூறினர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!