மூதாட்டியிடம் செயின் பறித்த திருடன் கைது

மூதாட்டியிடம் செயின் பறித்த திருடன் கைது
X

ஆண்டிபட்டி வாலிபர்கள் தோட்டத்திற்குள் ்புதைந்த தங்க செயினை போலீசார் மீட்டு, டூ வீலர் சீட்டில் வைத்து சரிபார்த்தனர்.

கடமலைக்குண்டில் மூதாட்டியிடம் செயின் பறித்த திருடன் கைது செய்யப்பட்டு அவரிடம் இருந்து செயின் மீட்கப்பட்டது.

கடமலைக்குண்டு பட்டாளம்மன்கோயில் தெருவை சேர்ந்தரவ் மேரி( 77.). இவர் தனது உறவினர் தோட்டத்தில் தனியாக அமர்ந்து தென்னங்கீற்றில் இருந்து விளக்குமாறு குச்சி கிழித்துக் கொண்டிருந்தார். அப்போது, அதே ஊரை சேர்ந்த சூர்யா

( 27,) மற்றும் முருகன்( 30 ) ஆகியோர் வந்து மூதாட்டி அணிந்திருந்த 8 பவுன் செயினை பறித்துச் சென்றனர். இந்த செயினை அங்கேயே ஒரு தோட்டத்தில் புதைத்து வைத்தனர். மூதாட்டி செயின் திருட்டு பற்றி அளித்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி சூர்யாவை கைது செய்தனர். அவர் கொடுத்த தகவல் அடிப்படையில் புதைக்கப்பட்ட செயினை மீட்டு மூதாட்டியிடம் ஒப்படைத்தனர். தலைமறைவாக உள்ள முருகனை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare