தேவதானப்பட்டியில் பெண்ணிடம் செயின் பறிப்பு

தேவதானப்பட்டியில் பெண்ணிடம் செயின் பறிப்பு
X
பெரியகுளம் தேவதானப்பட்டியில் நடந்து சென்ற பெண்ணிடம் 3 பவுன் செயின் பறித்துச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரியகுளம் வடுகபட்டி பத்திரகாளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அம்பிகா, 44. இவர் குள்ளப்புரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, டூ வீலரில் பின் தொடர்ந்து வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், அம்பிகா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் செயினை பறித்துச் சென்றனர். தேவதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story