முழு கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டது தேனி நகராட்சி

முழு கண்காணிப்பு வளையத்திற்குள்  கொண்டு வரப்பட்டது தேனி நகராட்சி
X
தேனி நகராட்சி பகுதி முழுக்க கண்காணிப்பு வளையத்திற்கு்ள கொண்டு வரப்பட்டுள்ளது என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேனி நகராட்சியில் தற்போதைய நிலவரப்படி அத்தனை தெருக்களிலும் கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. இந்த கேமரா பதிவுகளை பதிவு செய்து பாதுகாக்கவும், தேவைப்படும் நேரத்தில் எடுத்து பரிசோதிக்கவும் தேனி, அல்லிநகரம் போலீஸ் ஸ்டேஷன்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அதாவது முக்கியப்பகுதிகள் என எதையும் பிரிக்காமல், எங்களுக்கு தேவையான பகுதிகள் அத்தனையிலும் கண்காணிப்பு கேமரா பொறுத்தப்பட்டுள்ளது. பல இடங்களில் கண்காணிப்பு கேமரா எங்கு பொறுத்தரப்பட்டுள்ளது என்பதை யாராலும் கண்டறிய முடியாத அளவுக்கு கேமரா வைத்துள்ளோம்.

தற்போது பொறுத்தப்பட்டுள்ள கேமராக்கள் இரவிலும் துல்லியமாக காட்சிகளை பதிவிடும். நீண்ட நேரம் வரை மின்தடை ஏற்பட்டாலும், காட்சிகளை பதிவு செய்யும் வகையில் அதற்கென சிறப்பு ஏற்பாடுகளும் செய்துள்ளோம். எனவே ஏதாவது ஒரு குற்றச்சம்பவம் நடந்தால், உடனே குற்றவாளிகளை கைது செய்ய, இந்த பதிவுகள் உதவும் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags

Next Story