பதுக்கல், கடத்தலை தடுக்காமல் விற்பவர்களை பிடித்தால் போதுமா?

பதுக்கல், கடத்தலை தடுக்காமல் விற்பவர்களை பிடித்தால் போதுமா?
X

பைல் படம்.

தேனி மாவட்டத்தில் போதை பாக்கு, புகையிலை கடத்தலை தடுக்காமல், விற்பனை செய்பவர்களை பிடித்தால் மட்டுமே விற்பனையினை முடக்கி விட முடியாது.

தேனி மாவட்டத்தில் எஸ்.பி., பிரவீன்உமேஷ் டோங்கரே உத்தரவின் பேரில் போலீசார் போதை பாக்கு, புகையிலை விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கடைகளுக்கு சீல் வைத்தனர். அதன் பின்னர் உணவு பாதுகாப்புத்துறையினரும், உள்ளாட்சி சுகாதாரத்துறையினரும் இந்த ஆய்வில் இணைந்து கொண்டனர். இதுவரை சில்லரையில் போதை பாக்கு, புகையிலை விற்ற 42 கடைகளுக்கு சீல் வைத்துள்ளனர்.

இந்த விஷயம் வரவேற்க கூடியதே என்றாலும் இதனால் என்ன பலன் கிடைக்கப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம், தேனி மாவட்டத்தில் பல ஆயிரம் சில்லரை விற்பனை கடைகள் உள்ளன. இத்தனை கடைகளையும் சீல் வைப்பது சாத்தியம் இல்லை. மாறாக இவர்களுக்கு போதை பாக்கு, புகையிலையினை பதுக்கி வைத்து தினமும் விற்பனை செய்யும் மொத்த வியாபாரிகளை பிடிக்க வேண்டும். போலீசாரும், உணவு பாதுகாப்புத்துறையினரும், உள்ளாட்சி சுகாதாரப்பிரிவும் , போதை பாக்கு, புகையிலையினை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் நபர்களை கைது செய்ய வேண்டும். அப்படி செய்தால் விற்பனையினை முற்றிலும் முடக்கலாம் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story
highest paying ai jobs