தேனி நிலமோசடியில் 2 ஆர்.டி.ஓ., 2 தாசில்தார் உட்பட 9 அதிகாரிகள் மீது வழக்கு

தேனி நிலமோசடியில்  2 ஆர்.டி.ஓ., 2 தாசில்தார் உட்பட 9 அதிகாரிகள் மீது வழக்கு
X

பைல் படம்.

தேனி மாவட்ட நிலமோசடியில் 2 ஆர்.டி.ஓ., 2 தாசில்தார் உட்பட 9 அதிகாரிகள் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தேனி மாவட்டம், பெரியகுளம் தாலுகாவில் 182.50 ஏக்கர் நிலத்தை (இதன் அரசு மதிப்பு 19 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய், உண்மையான மதிப்பு பல கோடியை தாண்டும்) சிறப்பு மென்பொருள் மூலம் (அரசு அங்கீகாரம் பெறதா தனி மென்பொருள்) கணிணி பட்டா வழங்கி உள்ளனர். இந்த நிலம் வழங்கப்பட்டது குறித்து அரசின் பதிவேடுகளில் திருத்தம் செய்யப்படவில்லை. கம்ப்யூட்டர் மூலம் மோசடி செய்து பட்டா வழங்கி உள்ளனர்.

இது குறித்து தற்போதய பெரியகுளம் சப்-கலெக்டர் ரிஷப் விசாரணை செய்தார். மோசடி உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து சர்வேயர்கள் பிச்சைமணி, சக்திவேல், துணை தாசில்தார்கள் சஞ்சீவ்காந்தி, மோகன்ராம், தாசில்தார்கள் கிருஷ்ணக்குமார், ரத்தினமாலா, பெரியகுளம் முன்னாள் ஆர்.டி.ஓ., ஜெயபிரிதா, தற்போதைய ஆர்.டி.ஓ., ஆனந்தி, வி.ஏ.ஓ.,க்கள் சுரேஷ், சக்திவேல், உதவியாளர்கள் அழகர், மோகன்ராம், தனிநபர்கள் முத்துவேல்பாண்டியன், போஸ், அ.தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலாளர் அன்னபிரகாஷ் உட்பட 14 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வழக்கில் சிக்கிய அதிகாரிகளில் ஆறு பேர் ஏற்கனவே சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நடைபெறும் விரிவான விசாரணையில் மேலும் பலர் சிக்குவார்கள் என மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story
the future of ai in healthcare