கூடலுார் அருகே பஸ் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் பலி- 25 பேர் காயம்

கூடலுார் அருகே பஸ் கவிழ்ந்த விபத்தில்   ஒருவர் பலி- 25 பேர் காயம்
X

கூடலுாரில் கவிழ்ந்த அரசு பஸ் மீட்கப்படுகிறது.

கோவையிலிருந்து குமுளி நோக்கி சென்ற அரசு பஸ் கூடலூர் அருகே பள்ளத்தில் கவிழ்ந்து ஒருவர் பலியானார். 25 பேர் காயம் அடைந்தனர்.

தேனி மாவட்டம் கூடலூரில் அரசு மருத்துவமனை அருகே புதிதாக பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த இடத்தில் வாகனங்கள் ஒரு வழித்தடத்தில் மட்டும் செல்ல அனுமதிக்கப்பட்டு வருகிறது. நேற்று இரவு கூடலூர் பகுதியில் பெய்த மழை காரணமாக ரோட்டோரம் மண் சரிந்துள்ளது.

இந்நிலையில் கோவையில் இருந்து குமுளி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் சாலை ஓரத்தில் மண் சரிந்த இடத்தில் இருந்த பள்ளத்தில் எதிர்பாரதவிதமாக கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இந்த பஸ்சை ஜெயமங்கலத்தைச் சேர்ந்த 50 வயதாகும் ஓட்டுனரான பழனிச்சாமி இயக்கி வந்துள்ளார்.இந்த பேருந்தில் 25க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர்.

பேருந்து கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் அனைவரும் படுகாயம் அடைந்துள்ளனர். கூடலூர் பகுதியை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க மாயி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து கூடலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காயமடைந்தவர்கள் தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். கலெக்டர் முரளீதரன் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்