டிப்பர் லாரி மோதி வாலிபர் பலி: உறவினர்கள் சாலை மறியல்

டிப்பர் லாரி மோதி வாலிபர் பலி:  உறவினர்கள் சாலை மறியல்
X

சடையாள்பட்டியில் விபத்தில் சிக்கிய டூ வீலர்

போடி அருகே டிப்பர் லாரி மீது டூ வீலர் மோதிய விபத்தில் வாலிபர் பலியானார்.

தேனி மாவட்டம் போடி அருகே மாணிக்காபுரத்தை சேர்ந்த சாகுல்ஹமீது என்பவரது மகன் அஜ்மல்கான், 27. இவரும் உப்புக்கோட்டையை சேர்ந்த ஸ்ரீதர், 20 என்பவரும், இன்று மாலை டூ வீலரில் சடையாள்பட்டி சென்றனர். சடையால்பட்டி பஸ்ஸ்டாப் அருகே எதிரே வந்த டிப்பர் லாரி மீது, டூ வீலர் மோதியது.

இதில் அஜ்மல்கான் தலையில் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே இறந்தார். ஸ்ரீதருக்கு கால் முறிந்த நிலையில், சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி சம்பவத்தில், அஜ்மல்கான் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்களை போலீசார் சமரசம் செய்தனர். வீரபாண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!