அ.தி.மு.க.,வினருக்கு தான் தீபாவளி இல்லை.. தி.மு.க வினருக்கு என்ன ஆச்சு

அ.தி.மு.க.,வினருக்கு தான் தீபாவளி இல்லை..  தி.மு.க வினருக்கு என்ன ஆச்சு
X
ஓ.பி.எஸ் மனைவி இரண்டு மாதங்களுக்கு முன்னர் இறந்ததால் தேனி மாவட்ட அ.தி.மு.க வினர் பலர் இந்த ஆண்டு தீபாவளி கொண்டாடவில்லை.

இந்த ஆண்டு ஓ.பி.எஸ்., மனைவி இறந்ததால், தேனி மாவட்டத்தில் பெரும்பாலான அ.தி.மு.க.,வினர் தீபாவளி கொண்டாடவில்லை. பெரியகுளம் தொகுதி தி.மு.க.,வினரும், போடி தொகுதி தி.மு.க.,வினரும் கூட தீபாவளி ஏன் கொண்டாடவில்லை.

வழக்கமாக தேனி மாவட்ட அரசியல் கட்சிகளில் அ.தி.மு.க.,வினர் தான் படு உற்சாகமாக தீபாவளி கொண்டாடுவார்கள். காரணம் தீபாவளிக்கு 15 நாள் முன்னரே தேனி மாவட்டத்தில் உள்ள அத்தனை அ.தி.மு.க., நிர்வாகிகளையும் ஓ.பி.எஸ்., சந்தித்து அவர்களுக்கு பணம் வழங்குவது வழக்கம். இரண்டு மாதங்களுக்கு முன்னர் ஓ.பி.எஸ்., மனைவி இறந்ததால், ஓ.பி.எஸ்., குடும்பத்தினர் துக்கம் அனுஷ்டித்து வருகின்றனர்.

இதனால் அ.தி.மு.க., நிர்வாகிகளுக்கு தீபாவளி பரிசு எதுவும் வழங்கவில்லை. இதனை உணர்ந்து அ.தி.மு.க.,வினரும் தீபாவளி கொண்டாடவில்லை. தி.மு.க.,வை பொறுத்தவரை கடந்த 10 ஆண்டுகளாக இருண்ட தீபாவளியாக இருந்தது. கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., தேனி மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளில் போடியை தவிர மற்ற மூன்றையும் கைப்பற்றியது.

இதனால் அவர்கள் சிறப்பாக தீபாவளி கொண்டாடுவார்கள் என்ற எதிர்பார்பு நிலவியது. கம்பம் எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன் தனது தொகுதி கட்சி நிர்வாகிகளை நன்கு கவனித்து விட்டார். ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜனும் ஆண்டிபட்டி தொகுதி கட்சி நிர்வாகிகளை நன்கு கவனித்து விட்டார். ஆனால் போடியில் எம்.எல்.ஏ., இல்லாததால் போடி தொகுதி தி.மு.க.,வினர் தவிக்கின்றனர். பெரியகுளம் தொகுதி எம்.எல்.ஏ., சரவணக்குமார் இருந்தும் கட்சியினரை பார்க்கவில்லை என பெரும் புகார் தி.மு.க.,வினர் மத்தியில் சுழன்றடிக்கிறது. இதனால் பெரியகுளம் தொகுதி தி.மு.க.,வினரும் தீபாவளி கொண்டாடவில்லை. இதனை கட்சி தலைமைக்கு கொண்டு செல்ல உள்ளதாக கட்சி நிர்வாகிகள் புலம்பி வருகின்றனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil