தற்காப்பு கலை கற்க வேண்டும்: மாணவிகளுக்கு போடி டிஎஸ்பி அறிவுரை
போடி பங்கஜம் பள்ளியில் நடந்த பெண்கள் பாதுகாப்பு கருத்தரங்கில் இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி பேசினார்.
தேனி மாவட்டம், போடி பங்கஜம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், போக்சோ விழிப்புணர்வு, பெண்குழந்தைகள் பாதுகாப்பு குறித்த கருத்தரங்கு டி.எஸ்.பி., சுரேஷ் தலைமையில் நடந்தது. இன்ஸ்பெக்டர்கள் ராமலட்சுமி, சரவணன், எஸ்.ஐ., பிரேம் ஆனந்த், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சஜூ உட்பட பலர் பங்கேற்றனர்.
டி.எஸ்.பி., சுரேஷ் பேசுகையில், 'மாணவிகள் மொபைல் போன்களை பயன்படுத்துவதில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சந்தேகத்திற்கு உரிய நபர்களிடம் இருந்து விலகியே இருக்க வேண்டும். பள்ளி வந்து செல்லும் போதும் கவனமுடன் இருக்க வேண்டும். பள்ளியில் நடக்கும் சம்பவங்களை வீட்டில் பெற்றோர்களிடம் கூற வேண்டும்.
சிலம்பம், கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்வது மிகவும் நல்லது. பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் தற்காப்பு கலைகளை கற்றுக்கொள்ள அனுமதிக்க வேண்டும். பாலியல் மற்றும் இதர சட்ட ரீதியான தொல்லைகள் ஏற்பட்டால் போலீசாரை உடனே தொடர்பு கொள்ள வேண்டும்' என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu