பிறப்புச் சான்றிதழை, தனி அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம்
பிறப்பு மற்றும் இறப்புப் பதிவுச் சட்டம், 2023-ன்படி வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல், ஓட்டுநர் உரிமம், கல்வி நிலையங்களில் சேர என பல்வேறு நடைமுறைகளுக்கும், தனி ஆவணமாக, பிறப்புச் சான்றிதழை அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், கல்வி வளாகத்தில் சேருவதற்கு, வாக்காளர் பட்டியல் தயாரித்தல், திருமண பதிவு, அரசு வேளைகளில் சேருவதற்கு என அனைத்திற்கு இனி ஒரே அடையாள ஆவணமாக பிறப்பு சான்றிதழை பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதற்கு முன் எல்லா நடவடிக்கைகளுக்கும் ஆதாரை முக்கிய ஆவணமாக பயன்படுத்தி வந்தனர் பொது மக்கள் . திருமண பதிவு, ஓட்டுநர் உரிமம், பயணத்தின் போது காட்டப்படவேண்டிய ப்ரூப், கல்லூரியில் சேர்க்கை என அனைத்திற்கும் ஆதாரை முக்கிய ஆவணமாக பயன்படுத்தி வந்தனர்
இந்தநிலையில், ஒருவரின் பிறந்த தேதி, பிறந்த இடம் மற்றும் பாலினத்தை உறுதிப்படுத்தும் பிறப்பு சான்றிதழையும் இனி ஒரே ஆவணமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த சட்டம், பிறப்புச் சான்றிதழை கல்வி நிலையங்களில் அனுமதி பெறுவது, வாகன ஓட்டுநர் உரிமம் பெற, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை பெற, திருமணத்தைப் பதிவு செய்வதற்கு, அரசு வேலை பெறுவது போன்ற பணிகளுக்கு தனி ஆவணமாக அடையாள சான்றிதழாக அளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், நாடாளுமன்றத்தில் பிறப்பு மற்றும் இறப்புப் பதிவு மசோதாவை தாக்கல் செய்தார்.ஆகஸ்ட் 1ஆம் தேதி மக்களவையிலும் 7ஆம் தேதி மாநிலங்களவையிலும் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu