/* */

இப்படி நடித்து பேரை கெடுத்துக்காதே... அறிவுரை சொன்ன பாலச்சந்தர்

இப்படி நடித்து பேரை கொடுத்துக்கொள்ளாதே என இயக்குனர்கள் பாலச்சந்தரும் விசுவும் அறிவுரை கூறினர் என்கிறார் நடிகை சீதா.

HIGHLIGHTS

இப்படி நடித்து பேரை கெடுத்துக்காதே... அறிவுரை சொன்ன பாலச்சந்தர்
X
நடிகை சீதா

இது பிரபல நடிகை சீதா பேட்டி ஒன்றில் கூறியதாவது: நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டு இருக்கும் போதுதான் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் குடும்பத்தோடு ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அந்த கல்யாண புகைப்படத்தை பார்த்து தான் நடிகரும், இயக்குனருமான பாண்டியராஜன் என்னை ஆண்பாவம் படத்தில் நடிக்க அழைத்தார். படம் வெற்றி பெற்றது. முதலில் நடிக்க விருப்பமே இல்லாமல் தான் சென்றேன். அப்போது பாண்டியராஜன் தான் இந்த ஒரு படத்தில் நடிங்க, பிடிக்கவில்லை என்றால், படிக்க போங்க என்றார்.

ஆனால் முதல் படத்திலேயே படம் ஹிட்டானதால், அடுத்தடுத்து படங்களில் நடிக்கத் தொடங்கி விட்டேன். ஆனால், ஆண்பாவம் படத்திலேயே நான் நடிக்க மாட்டேன் என்று நினைத்தார்கள். தண்ணீர் தூக்கி விட்டு வரும் சீனில் நான் சரியாக நடிக்கவில்லை என்று இயக்குநர் என்னை திட்டியதால், அழுதுக்கிட்டு நடிக்க மாட்டேன் என்றேன். அதன் பின் என் அப்பாதான் என்னை சமாதானப்படுத்தினார்.

அதன்பிறகு அடுத்தடுத்து படங்களில் நடித்துக்கொண்டு இருந்தேன். அப்போது தான் குருசிஷ்யன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அந்த படத்தில் நான் ஒரு மார்டன் பெண் ரோல் என்பதால் நடிக்க சம்மதித்தேன். அந்த படத்தில் குதிரை சவாரி செய்வேன், குடித்துவிட்டு ஆடுவது போல ஒரு பாட்டு வரும்.

அந்த பாட்டில் பெருசா கவர்ச்சியே இருக்காது. இந்த படத்தைப் பார்த்த பாலச்சந்தர் சார் கால் பண்ணி, என்ன சீதா இப்படி நடிச்சி இருக்க, நல்ல கதாபாத்திரம் வந்துட்டு இருக்கும் போது இவ்வளவு கிளாமர் தேவையா? இனி மேல் இப்படி நடிக்காதே என்றார்.

அடுத்து விசு சார் கால் பண்ணி, என்ன சீதா, என்ன கேரக்டர் இது, உனக்கு கிளாமர் சரி வராது. உனக்கு குடும்ப பாங்கான ரோல் தான் சரி, நீ இந்த மாதிரி நடிச்ச அந்த மாதிரிதான் ரோல் வரும் என்றார். அவர் சொன்னதும் என்னடா இப்படி சொல்லிவிட்டாரே என்று வருத்தப்பட்டேன். இப்போது அந்த பாட்டை பார்க்கும் போது இதற்காகத்தான் இப்படி திட்டினார்களா என்று தோன்றுகிறது. இவ்வாறு கூறியிருக்கிறார்.

Updated On: 2 May 2023 5:32 AM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    பிரசவித்த 5 மாதங்களுக்கு பின் முடி உதிர்வது ஏன்?
  2. இந்தியா
    ரஷ்யாவில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த இந்திய மருத்துவ மாணவர்கள்
  3. டாக்டர் சார்
    37 வயதில் கர்ப்பம் தரிக்க முடியுமா?
  4. சினிமா
    நேஷனல் கிரஷ்ஷூ... இவ்ளோ அழகா இருக்க இதுதான் பண்றாங்களாம்!
  5. நாமக்கல்
    விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் கட்சிகளுக்கு தேர்தல் கமிஷன்...
  6. நாமக்கல்
    மரவள்ளி பயிரில் ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை: 12ம் தேதி இலவச பயிற்சி
  7. சினிமா
    திரும்பவும் ரிலீசாகும் கஜினி..! சூர்யா ரசிகர்களுக்கு விருந்து..!
  8. இந்தியா
    பா.ஜனதா தேசிய தலைவர், சிவராஜ் சிங் சவுகான்?
  9. தமிழ்நாடு
    இனியாவது திருந்துவார்களா கேரள இடதுசாரிகள்..?
  10. லைஃப்ஸ்டைல்
    நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த 5 சுவையான பழங்கள்