தேனி: கள்ளக்காதலை காட்டிக் கொடுத்த நண்பர் கொலை: 6 பேர் கைது

தேனி: கள்ளக்காதலை காட்டிக் கொடுத்த  நண்பர் கொலை: 6 பேர் கைது
X

கள்ளக்காதலை காட்டிக்கொடுத்த நண்பரையே கொலை செய்த ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

இருநாட்களுக்கு முன் தனியார் தோட்ட கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட உடலை பரிசோதனை செய்ததில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது

கள்ளக்காதலை காட்டிக்கொடுத்த நண்பரை கொலை செய்த ஆறு பேரை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் முகமதுஹமீம். இவரை காணவில்லை என இவரது குடும்பத்தார் தேடி வந்தனர். இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் இவரது உடல் தனியார் தோட்டத்து கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது. உடலை மருத்துவ பரிசோதனை செய்த போது, இவர், கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், எஸ்.ஐ.,க்கள் இத்ரிஸ்கான், சாகுல்ஹமீது ஆகியோர் கொண்ட தனிப்படையினர் இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில், இவரை கொலை செய்ததாக ரபீக்ராஜா, ஆசிக் ஆகியோரையும், கொலைக்கு உடந்தையாக இருந்து உடலை தீ வைத்து எரித்து பின்னர், கிணற்றில் வீசி சென்றதாக கருப்பசாமி, பின்னிப்பாண்டி, பாண்டீஸ்வரன், ஷேக் பரீத் ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர். ரபீக்ராஜாவும், கொல்லப்பட்ட முகமதுஹமீமும் நண்பர்கள். இந்நிலையில் ரபீக்ராஜாவின் கள்ளக்காதலை அந்த பெண்ணின் கணவரிடம் காட்டிக்கொடுத்து விட்ட ஆத்திரத்தில், ரபீக்ராஜா தனது நண்பரையே இவர்களின் உதவியுடன் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Tags

Next Story
ai and business intelligence