பாஜக தரப்பிலிருந்து ஓபிஎஸ் தரப்புக்கு சொல்லப்பட்ட முக்கிய செய்தி..?

பாஜக தரப்பிலிருந்து முக்கியமான செய்தி ஒன்று, ஓபிஎஸ் தரப்புக்கு சொல்லப்பட்டுள்ளது. என்ன அது?

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பாஜக தரப்பிலிருந்து ஓபிஎஸ் தரப்புக்கு சொல்லப்பட்ட முக்கிய செய்தி..?
X

பாஜக இடையே கூட்டணி தற்சமயம் முறிந்து விழுந்துள்ள நிலையில், ஓபிஎஸ் என்ன செய்ய போகிறார்? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அத்துடன், பாஜக தரப்பிலிருந்து முக்கிய விஷயம் ஒன்று, ஓபிஎஸ் தரப்புக்கு சொல்லப் பட்டுள்ளது. ஏது என்ன என்பதுதான் இப்போதைய கேள்வி

அண்ணாமலையின் பேச்சை இனியும் பொறுப்பதாக இல்லை. கூட்டணியை பொறுத்தவரை பாஜக எங்களுடன் இப்போது இல்லை. தேர்தல் வரும்போதுதான் அதை முடிவு செய்ய முடியும், எங்களை விமர்சிக்கும் பாஜகவை நாங்கள் ஏன் சுமக்க வேண்டும். அண்ணாமலை தனித்துப் போட்டியில் நோட்டாவுக்கு கீழ் தான் வாங்குவார்? என்று சொல்லிவிட்டார் மாஜி அமைச்சர் ஜெயக்குமார்.

இதனால், கூட்டணி பூசல் வெடித்து கிளம்பி உள்ளது.. கட்சியின் முடிவையே தான் எப்போதும் சொல்வேன் என்று ஜெயக்குமார் கூறியிருப்பதால், எடப்பாடி பழனிசாமியின் கருத்தாகவும், ஒட்டுமொத்த அதிமுகவின் கருத்தாகவும் இது பார்க்கப்பட்டு வருகிறது.

மறைந்த முதல்வர் அண்ணா குறித்து தான் பேசிய கருத்தினை வாபஸ் பெறாமல், விளக்கமளிக் கிறேன் என்கிற பேரில் அண்ணாமலை மீண்டும் சீண்டி பேசியிருந்தார்.. இதனால் எடப்பாடி பழனிச்சாமி ஏகத்துக்கும் கோபமடைந்து விட்டாராம்.

அமித்ஷா - எடப்பாடி சந்திப்பு அண்மையில் நடந்து கொண்டிருந்த நிலையில், அண்ணாவை பற்றி அண்ணாமலை சீண்டிய சம்வத்தை எடப்பாடியின் கவனத்துக்கு ஜெயக்குமாரும் கொண்டு சென்றிருக்கிறார். ரூபாய்க்கு ஒருபடி அரிசி டு மெட்ரோ ரயில் வரை.. திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி.. அதற்கு எடப்பாடி, "கடுமையாக ஆட்சேபியுங்கள்' என அவருக்கு அறிவுறுத்தியதுடன், சி.வி.சண்முகத்திடமும், அண்ணாமலை கடுமையாக அட்டாக் பண்ணுங் கள் என்றும் கேட்டுக்கொண்டாராம் எடப்பாடி.

அதனால்தான் சி.வி சண்முகம், அண்ணாமலையை கொந்தளித்து பேசியிருந்தாராம். இறுதியில் கூட்டணியில் பாஜக இல்லை என்றே அறிவித்து விட்டார் ஜெயக்குமார். இந்த அதிரடி முடிவுகளால் பாஜக அதிர்ச்சியானதோ இல்லையோ, ஓபிஎஸ் தரப்பு படுகுஷியில் உள்ளதாம்.

கடைசி வரை தங்களை கண்டுகொள்ளாமல், பாஜகவால் கழட்டிவிடப்பட்டதால், நொந்து போயிருக்கிறது ஓபிஎஸ் டீம்.. அதனால்தான், 3-வது அணியை அமைப்பதற்கு ஓபிஎஸ் + டிடிவி தரப்பு தயாராகி வருவதாகவும், ஆனால், இதற்கு பாஜக முட்டுக்கட்டை போடுவதாகவும் செய்திகள் கசிந்தன. . எனினும், ஓபிஎஸ் நிர்வாகிகள் இந்த விஷயத்தில் பாஜக பேச்சை கேட்க போவதில்லையாம். நம்பி நம்பி மோசம் போயாச்சு, இனியும் பாஜகவை நம்பி அரசியல் பண்ணுவது வேஸ்ட் என்ற முடிவுக்கு ஓபிஎஸ் தரப்பு வந்து விட்டார்களாம்..

அதனால்தான் ஒரு டிவி சேனலுக்கு மூத்த தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் தந்த பேட்டியில், "நாங்கள் தனித்து நிற்போம் என்றும், பாஜகவுடன் ஓபிஎஸ் இல்லை என்றும்" அழுத்தம் திருத்தமாக கூறியிருந்தார்.

அதுமட்டுமல்ல, தங்கள் பலத்தை காட்டுவதற்காக தனிக்கட்சி தொடங்குவதற்கு ஓபிஎஸ்ஸிடம் ஆதரவாளர்கள் வலியுறுத்தினார்களாம்.. ஆனால், இதற்கு ஓபிஎஸ் ஒப்புக்கொள்ளவில்லை என தெரிகிறது.. தனிக்கட்சியை ஆரம்பித்துவிட்டால், அதிமுகவுக்கும் நமக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்பதுபோல் ஆகிவிடும், அதனால், வேற ஐடியா ஏதாவது இருந்தால் சொல்லுங்கள், என்று நிர்வாகிகளிடம் சொன்னாராம்.

தனிக்கட்சியை ஓபிஎஸ் துவங்காவிட்டாலும், தினகரன், ஓபிஎஸ் இருவருமே சேர்ந்து ஓர் அணியில் திரள வாய்ப்புள்ளதாக தெரிகிறது.. இதனால் தென்மண்டலத்தில், அதிமுக ஓட்டுக்கள் சிதறிப்போய், திமுகவுக்கே சாதகமாகிவிடவும் வாய்ப்பு உள்ளது. அதனால்தான், ஓபிஎஸ், தினகரனை தனித்து செயல்பட வேண்டாம் என்று பாஜக கேட்டுக் கொண்டதாம்.

அதுமட்டுமல்ல, மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று ஓபிஎஸ் தினகரன் தரப்புக்கு, பாஜக தரப்பில் கோரிக்கையும் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.. எனவே இது தொடர்பாக விரைவில் நிர்வாகிகளுடன் இருவருமே ஆலோசிப்பார்கள் என்று தெரிகிறது.

வழக்கமாக பாஜக சொல்லும் எந்த முடிவுக்கும், ஓபிஎஸ் சிவப்பு கம்பளம் விரித்து ஆதரவு தெரிவித்துவிடும் நிலையில், பாஜகவின் இந்த அறிவுறுத்தலை எப்படி எதிர்கொள்ள போகிறார் என்று தெரியவில்லை.

ஓபிஎஸ் தனிக்கட்சி தொடங்கினால், திமுகவுக்கான களம் சாதகமாகிவிடும் என்று பாஜக நினைக்கிறது.. ஏற்கனவே, திமுகவின் B டீம் என்று ஓபிஎஸ் -ஐ, அதிமுக தொடர்ந்து விமர்சித்துவரும் நிலையில், ஓபிஎஸ்ஸின் அரசியல் இனி எப்படி நகர போகிறது என்று தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்.

Updated On: 20 Sep 2023 9:00 AM GMT

Related News

Latest News

 1. டாக்டர் சார்
  Thrombosis Meaning in Tamil-த்ரோம்போசிஸ் என்றால் என்ன? பார்க்கலாம்...
 2. திருவண்ணாமலை
  மலை உச்சியில் இருந்து இறக்கப்பட்டது திருவண்ணாமலை மகா தீப கொப்பரை
 3. இந்தியா
  சென்னை புயல் வெள்ள நிவாரணத்திற்கு மத்திய அரசு ரூ.450 கோடி ஒதுக்கீடு
 4. நாமக்கல்
  நாமக்கல் மாவட்டத்தில் 8 தாலுகாக்களில் ரேசன் கார்டு குறைதீர்
 5. நத்தம்
  நத்தம் அருகே கால்நடை மருத்துவ முகாம்..!
 6. திருவள்ளூர்
  கன்னிகைப்பேர் அருகே மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து...
 7. திருவள்ளூர்
  குடிநீர்,மின்சாரம் வழங்க பொதுமக்கள் சாலை மறியல்..!
 8. திருவள்ளூர்
  வதந்திகளை நம்ப வேண்டாம்: புழல் ஏரியை ஆய்வு செய்த பின் அமைச்சர்...
 9. திருப்பரங்குன்றம்
  திருப்பரங்குன்றம் அருகே சாலை அமைக்க பூமி பூஜை..!
 10. தென்காசி
  தென்காசியில் டிச.9 சிறப்பு தனியார் வேலை வாய்ப்பு முகாம்: மாவட்ட...