உஷார்... செல்போன் வெடித்து பெண் உயிரிழப்பு
பைல் படம்
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் வட்டம், கபிஸ்தலம் அருகே அருகே ஆடுதுறை, விசித்திர ராஜபுரத்தில் வசித்து வருபவர் கோகிலா(32). இவரது கணவர் பிரபாகர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்த நிலையில், தனது மகன் பிரகதீஷ்(9) உடன் தனியாக வசித்து வந்தார்.
இவர் கபிஸ்தலத்தில் செல்போன் மற்றும் கடிகாரம் சரி செய்யும் கடையை நடத்தி வந்தார்.. கோகிலா புதன்கிழமை வழக்கம் போல் கடைக்கு வந்து தனது பணிகளை தொடர்ந்து மேற்கொண்டிருந்தார். அப்போது செல்போனில் சார்ஜ் போட்டபடி பேசியதாக கூறப்படுகிறது.
இதில் மின்கசிவு ஏற்பட்டு செல்போன் வெடித்து, கடை முழுவதும் தீ பற்றி எரிந்தது. பின்னர், கடையின் உள்ளே இருந்த கோகிலா கூச்சலிட அக்கம் பக்கத்தினர் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். இருப்பினும், கோகிலா தீயில் சிக்கி உடல் முழுவதும் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கபிஸ்தலம் காவல் துறையினர் கோகிலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செல்போன் வெடிப்பதற்கான காரணங்கள் என்ன?
செல்போன் பற்றி அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்களை நீங்களும் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள். இன்றைய நவீன காலக்கட்டத்தில் ஒரு மனிதன் உண்ண உணவு, உடுக்க உடை இவைகள் இல்லாமல் கூட வாழ பழகிக் கொண்டாலும் கொள்வானே அன்றி, செல் போன் இல்லாமல் வாழ முடியவே முடியாது என்கிற நிலைமை வந்தாயிற்று.
இந்த மொபைல் போன் ஈர்ப்பு என்பது பெரியவர்களை விட குழந்தைகளை தான் அதிகம் தாக்கி உள்ளது. இப்போது எல்லாம் பிறந்த குழந்தை முதல் இந்த செல்போனை கையில் கொடுத்தால் தான் அழுகையே நிறுத்துகிறது.என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த மொபைல் எந்த அளவிற்கு நம்முடைய அன்றாட வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி விட்டது என்று. வெறும் தகவல் பரிமாற்றத்திற்காக மட்டுமே அறியப்பட்ட இந்த கருவி அது இல்லை என்றால் வாழ்க்கை இல்லை என்ற நிலைமைக்கு நம்மை கொண்டு போய் விட்டது. இந்த மொபைல் போனை நாம் வாங்குவது பயன்படுத்துவது இவையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும், ஆனால் இதை சரியாக பராமரிக்காத பட்சத்தில் ஏற்படும் அபாயகரமான விஷயங்களை பற்றிய சில தகவல்கள் இதோ..
போன் சார்ஜில் இருக்கும் போது பேச கூடாது. நாம் பொதுவாகவே போன் பேசும் போது பரிமாற்றப்படும் தகவல்கள் அனைத்துமே சேட்டிலைட் வாயிலாக தான் நடைபெறும். போன் சார்ஜில் இருக்கும் போது நாம் பேசினால் சேட்டிலைட் அதிர்வலைகளும் போன் சார்ஜின் அதிர்வலைகளும் ஒன்றாக சேரும் போது போன் வெடிப்பதற்கான வாய்ப்புகள் பெருமளவில் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே போன் சார்ஜில் இருக்கும் போது எக்காரணத்தை கொண்டும் பேசக்கூடாது.
இரவில் தூங்கும் போது பலர் போனை சார்ஜில் போட்டு விட்டு அப்படியே உறங்கி விடுவார்கள். போன் ஃபுல் சார்ஜ் ஆகும் போது பேட்டரி ஆனது அதிக அழுத்தத்திற்கு ஆளாகிறது. அந்த போனில் அழைப்பு வரும் போது நீங்கள் அதை உடனடியாக எடுத்து பேசினாலோ அல்லது சார்ஜ் ஸ்விட்ச் ஆஃப் பண்ணாமல் உடனடியாக பேட்டரி பின்னை போனில் இருந்து எடுத்துவிட்டு கால் ஆன் செய்தாலோ பேட்டரி அதீக அழுத்தமாகி வெடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இப்போதெல்லாம் மொபைல் வெடித்து அதனால் ஏற்படும் விபத்துக்களை நாம் அடிக்கடி கேள்விப்படுகின்றோம் கொஞ்சம் கவனமாக நடந்து கொண்டால் போதும். இது போன்ற அசம்பாவிதங்களை தடுத்து விடலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu