கம்பம் அருகே மதுவிற்கு அடிமையானவர் மனைவியுடன் தகராறு செய்து தற்கொலை

கம்பம் அருகே மதுவிற்கு அடிமையானவர் மனைவியுடன் தகராறு செய்து தற்கொலை
X
கம்பம் அருகே மதுவிற்கு அடிமையானவர் மனைவியுடன் தகராறு செய்து தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

தேனி மாவட்டம் கம்பத்தை அடுத்த உத்தமபாளையம் அருகே உள்ளது கோகிலாபுரம்.இந்த கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். (வயது 38). மதுவிற்கு அடிமையானவர். இவரது இரண்டாவது மனைவி ஜோதியுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. மனைவி, குழந்தைகளுடன் குடித்து விட்டு நள்ளிரவு வரை சண்டை போட்ட, சரவணன், அதன் பின்னர் துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி உத்தமபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!