அதிமுக 'தலைவர்' ரவீந்திரநாத் ? இபிஎஸ் முகாம் கொந்தளிப்பு
பைல் படம்
ஓபிஎஸ் மகனுக்கான இந்த விநோத அங்கீகாரத்துக்கு ஈபிஎஸ் முகாம் புகைச்சல் கண்டுள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்குவதை முன்னிட்டு, அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்துக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரல்காத் முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார். அவர்களில் அதிமுகவின் மக்களவை பிரதிநிதியான ரவீந்திரநாத்தும் அடங்குவார்.
அமைச்சர் அனுப்பிய அழைப்பில், 'மக்களவை அஇஅதிமுக தலைவர்' என்று இடம்பெற்றிருப்பதை ஓபிஎஸ் தரப்பினர் வெகுவாய் சிலாகித்து பரப்பி வருகின்றனர். அதிமுக பிளவுற்ற நிலையில், ரவீந்திரநாத்தின் அதிமுக எம்பி அங்கீகாரத்தை ரத்து செய்யுமாறு மக்களவைத் தலைவருக்கு ஈபிஎஸ் சார்பில் அனுப்பப்பட்ட கடிதம் பரிசீலனையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த பரிசீலனையின் முடிவு வெளியாகும்வரை, அதிமுகவின் ஒரே மக்களவை உறுப்பினராகவும், அந்த வகையில் கட்சியின் மக்களவை தலைவராகவும் ரவீந்திரநாத் தொடர்கிறார். கட்சி சார்பிலான அனைத்து அதிகாரபூர்வ கூட்டங்களிலும் அவரே பங்கேற்கிறார். இந்த வரிசையில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சித் தலைவர்களுக்கான அழைப்பு ரவீந்திரநாத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஆனால் இந்த அழைப்பு அதிமுகவின் ஈபிஎஸ் முகாமில் அதிகம் விவாதிக்கப்பட்டு வருகிறது. கடும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே இரட்டை இலை சின்னத்திற்காக இறுதிக்கட்ட போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் ரவீந்திரநாத்திற்கு கிடைத்த இந்த அங்கீகாரம் இ.பி.எஸ். அணிக்கு ஒரு பின்னடைவினை கொடுத்துள்ளது.
அதிமுக தலைமை மோதலால் நடந்து வரும் குளருபடிகளுக்கு நீதிமன்றம் மூலம் ஓரிரு நாளில் தீர்வு..
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி அறிவிக்கப்பட்டார். அதன் பின்னர் அதிமுக பொருளாளர் பதவியிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டார். மேலும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் அவரும் அவரது ஆதரவாளர்களும் நீக்கப்பட்டனர்.
ஓபிஎஸ் மகன் நீக்கம்: ஓபிஎஸ் மகனும் தேனி எம்பியுமான ரவீந்திரநாத்தும் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதால் மக்களவையில் அதிமுகவுக்கு ஒரே ஒரு எம்பி இருந்த நிலையில் தற்போது அதுவும் இல்லாமல் போய்விட்டது. இந்த நிலையில் தான் அதிமுக எம்பியா இல்லையா என்பதை தேர்தல் ஆணையம் முடிவு செய்யும் என ஓபி. ரவீந்திரநாத் கூறியிருந்தார்.
ஓபிஎஸ் மகன் அதிமுக எம்பி இல்லை: இந்த நிலையில் ஓபிஎஸ் மகன் அதிமுக எம்பி இல்லை என எடப்பாடி பழனிச்சாமி மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருக்கையில் தேனி எம்பியாக உள்ளவரும் ஓபிஎஸ் மகனுமான ஓ பி ரவீந்திரநாத்தை அதிமுகவிலிருந்து நீக்கிவிட்டோம். எனவே கட்சியிலிருந்து நீக்கியதால் அவர் அதிமுக எம்பி இல்லை. அவரை அதிமுக எம்பியாக கருத வேண்டாம் என அந்த கடிதத்தில் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.
ஓபி. ரவீந்திரநாத் பதில் கடிதம்: இதையடுத்து அதற்கான பதில் கடிதத்தை ஓ.பி.ரவீந்திரநாத், சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் கொடுத்துள்ளார். அதில் தன்னை அதிமுகவிலிருந்து நீக்கியது செல்லாது. அதிமுகவின் உள்கட்சி பிரச்னை நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தில் உள்ளது. எனவே எடப்பாடி பழனிச்சாமியின் கடிதத்தை நிராகரித்துவிடுமாறு குறிப்பிட்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu