அதிமுக - பாஜக உறவு :அடுத்த கட்டம் என்ன?
பைல் படம்
பாஜக உறவு வேண்டாம் என்ற இந்த அறிவிப்பு பாஜகவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறதாம்..அதோடு இது பற்றி ஊடகங்களில் பேசாமல் பாஜக தலைவர் அண்ணாமலை அமைதி காத்து வருகிறார். முக்கியமாக கூட்டணி பற்றி எதுவும் பேச வேண்டாம் என்று அண்ணாமலை இருக்கிறாராம்.
அண்ணாமலையை தொடர்பு கொண்டிருக்கிறார் பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலர் பி.எல்.சந்தோஷ். ஏன் இப்படி கூட்டணி முறியும் நிலைக்கு கொண்டு சென்றீர்கள் என்று கேட்டுள்ளார். மேலும், தமிழக பாஜகவின் மேலிட நிர்வாகிகளை தொடர்பு கொண்டும் பேசியுள்ளார் சந்தோஷ். இதனையடுத்து, அதிமுக-பாஜக கூட்டணி பாறை போல உறுதியுடன் இருக்கிறது என்று திருப்பதி நாராயணன் பதிவு செய்துள்ளார்.
கூட்டணி குறித்து யாரும் பேசக்கூடாது. கூட்டணியை பற்றி கட்சி தலைமை முடிவெடுக்கும். அதனால், கூட்டணியை யாரும் விமர்சிக்கக்கூடாது என்று தமிழக பாஜகவினருக்கு கரு.நாகராஜனும் பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்தே நாம் இனி இதில் பேச வேண்டாம். கட்சியை தனியாக வளர்க்க வேண்டும். கட்சிக்கு புதிய முகம் கொடுக்க வேண்டும். அதிமுகவை நம்பி இருக்க கூடாது என்றுதான் இப்படி எல்லாம் செய்தேன். அதை மேலிடம் புரிந்துகொள்ளவில்லை என்றால் பரவாயில்லை.
நான் இதில் பேசாமல் அமைதியாகவே இருக்கிறேன். கட்சியை வளர்க்கும் பணிகளை மட்டும் செய்கிறேன் என்று அண்ணாமலை முடிவு எடுத்துள்ளாராம். இதன் காரணமாகவே அவர் அமைதி காப்பதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் மெகா கூட்டணி அமைப்போம். மெகா கூட்டணி அமைத்து திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று எடப்பாடி பழனிசாமி கடந்த சில மாதங்களுக்கு முன் கூட்டம் ஒன்றில் முழக்கமிட்டு இருந்தார். அவர் எப்போது சொன்னாரோ அப்போதில் இருந்தே பாஜக கூட்டணியில் ஏதாவது பிரச்னை ஏற்பட்ட வண்ணம்தான் உள்ளது.
சமீப நாட்களாக நடக்கும் விஷயங்களை பார்த்தால் எங்கே அதிமுக மெகா கூட்டணி மட்டுமல்ல சாதாரண சின்ன கூட்டணியே கூட அமைக்க முடியாமல் போய்விடுமோ என்று எண்ண தோன்றுகிறது. ஏற்கெனவே தேமுதிக, பாமக கூட்டணி அதிமுகவுடன் முறிந்த நிலையில் தற்போது பாஜக - அதிமுக கூட்டணியும் முறிந்துள்ளது. இதனால் லோக்சபா தேர்தலில் இவர்கள் கூட்டணி வைப்பதும் சந்தேகம் ஆகி உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu