11 விரைவு ரயில்களில் கூடுதல் நிறுத்தங்கள்: ரயில்வே அறிவிப்பு

11 விரைவு ரயில்களில் கூடுதல் நிறுத்தங்கள்: ரயில்வே அறிவிப்பு
X

பைல் படம்

உழவன், அந்தியோதயா, பாமணி உள்பட 11 விரைவு ரயில்களில் செப்.20 முதல் தற்காலிகமாக கூடுதல் நிறுத்தங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

செப்.20 ஆம் தேதி முதல் எழும்பூா் - தஞ்சாவூா் உழவன் விரைவு ரயில் (எண்: 16856/16866) கடலூா் துறைமுகத்தில் இரு மாா்க்கத்திலும் நின்று செல்லும்,

தாம்பரம் - நாகா்கோவில் அந்தியோதயா விரைவு ரயில் (எண்: 20291/20692) சாத்தூரில் இரு மாா்க்கத்திலும் நின்று செல்லும்.

ராமேஸ்வரம் - அயோத்தி கண்டோன்மெண்ட் ஷ்ரத்தா சேது வாராந்திர அதிவிரைவு ரயில் (எண்: 22613/ 22614) ராமநாதபுரம் மற்றும் காரைக்குடியில் நின்று செல்லும்.

திருநெல்வேலி - பாலக்காடு பாலருவி விரைவு ரயில் ஏற்றமானூரில் நின்று செல்லும்.

திருச்சி - ராமேஸ்வரம் விரைவு ரயில் (16849/ 16850) கீரனூரில் நின்று செல்லும்.

அதே போல், திருப்பதி - ராமேஸ்வரம் வாரம் மூன்று முறை இயங்கும் விரைவு ரயில் (எண்: 16779/16780) செப்.24 - முதல் ஆரணி சாலையில் நின்று செல்லும்.

திருப்பதி - மன்னாா்குடி பாமணி விரைவு ரயில் செப்.25 - முதல் போளூா் மற்றும் திருக்கோவிலூரில் நின்று செல்லும்.

அஜ்மீா் - ராமேசுஸ்வரம் ஹம்ஷஃபா் வாராந்திர அதிவிரைவு ரயில் (எண்: 20973/20974) செப்.23 - முதல் புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரத்தில் நின்று செல்லும்.

புருலியா - விழுப்புரம் வாரம் இருமுறை இயங்கும் அதிவிரைவு ரயில் (எண்: 22605/ 22606) செப்.25 - முதல் திருக்கோவிலூரில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!