பெரியகுளம் அருகே வீட்டில் திருடும் போதே கையும் களவுமாக பிடிபட்ட திருடன்

பெரியகுளம் அருகே வீட்டில் திருடும் போதே கையும் களவுமாக பிடிபட்ட திருடன்
X
பெரிய குளம் அருகே வீட்டில் திருடும் போதே உரிமையாளர் வந்து விட்டதால் திருடன் கையும், களவுமாக சிக்கினான்.

தேனி மாவட்டம் பெரியகுளம் லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் பரிமளா. இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்றிருந்தார். அந்த சமயத்தில் பழனிசெட்டிபட்டியை சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் கதவை திறந்து வீட்டின் பீரோவில் தங்க நகைகள் இருக்கிறதா? என தேடிக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் வீட்டிற்குள் நுழைந்த பரிமளா வீட்டிற்குள் திருடனை பார்த்ததும் சத்தம் போட்டார். பொதுமக்கள் வந்து ஈஸ்வரனை பிடித்து, தென்கரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Tags

Next Story