இந்திய ரயில்வேயின் மணிமகுடம் டி.எப்.சி.

இந்திய ரயில்வேயின் மணிமகுடம் டி.எப்.சி.
X

பைல் படம்

சரக்கு இரயில் மட்டுமே செல்ல தனி தண்டவாளம் அமைக்கப்படுகிறது.

இந்திய ரயில்வேயின் சரக்கு துறையின் தலையெழுத்தை மாற்றி எழுத போகிறது டி.எப்.சி.,

சரக்கு இரயில் மட்டுமே செல்ல தனி தண்டவாளம் அமைக்கப்படுகிறது.இந்த திட்டத்தை செயல்படுத்த வடக்கு மாநிலங்களை, கிழக்கு மேற்கு மாநிலங்களோடு இணைக்க 1.2 இலட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் மொத்தம் 7 மாநிலங்கள் 77 மாவட்டங்கள் இணைக்கப்படுகிறது. இதுவரை ஆமை வேகத்தில் செல்லும் சரக்கு இரயிலின் சராசரி வேகம் Express Trainகளுக்கு இணையாக இருக்கும்.

அதாவது டெல்லியிலிருந்து சென்னைக்கு 34 மணி நேரத்தில் பயணிகள் இரயில் செல்கிறது. ஆனால் சரக்கு ரயில்கள் செல்ல 60 முதல் 70 மணி நேரம் ஆகிறது. இவ்வளவு நேரம் ஆனாலும் சரக்கு இரயில் வந்து சேராது. நம்ம ஊர் டவுன் பஸ் போன்ற Passenger Train வந்தாலும் வழி விட்டு நின்று போகும் இந்த சரக்கு இரயில். ஆக எப்போ வந்து சேரும் என்று டிரைவருக்கும் தெரியாது. இரயில் நிலைய அதிகாரிக்கும் தெரியாது. இரயில்வேயில் பாவபட்ட துறை என்றால் சரக்கு ரயிலே.

அதனாலேயே இந்தியாவில் உள்நாட்டு சரக்குகளை கையாள்வதில் 70% சாலை போக்குவரத்தும், 30% மட்டுமே இரயில்வேயும் செய்கிறது. தற்போது உற்பத்தி செலவில் 15% உள்ள சரக்கு கட்டணத்தை -8% ஆக குறைக்கவே இந்த டி.எப்.சி., திட்டம் போடப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் எப்படி எக்ஸ்பிரஸ் இரயிலுக்கு Time Schedule உண்டோ அதுபோல் இனி சரக்கு ரயிலுக்கும் டைம் வைத்து (On Time Delivery) - இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Dedicated Freight Corridor(DFC) மொத்தம் 6 அமைக்கப்பட உள்ளது. அதில் இரண்டிற்கு நிதி ஒதுக்கப்பட்டு வேலை அசுர வேகத்தில் நடந்து முடிந்து நவம்பர் முதல் தேதி முதல் பயன்பாட்டிற்கு வருகிறது. அதாவது 1,875 km long eastern dedicated freight corridor (EDFC) and the 1,506 km long western dedicated freight corridor (WDFC) அமைக்கும் பணிகள் நிறைவடைந்து விட்டன.

இந்தியாவிலுள்ள மொத்த இரயில்வேயும் கையாளும் சரக்கில் சரிபாதி - அதாவது 55% இந்த இரண்டு இரயில்வே நெட்வொர்க்கில் தான் கையாளப்படுகிறது. இந்த டி.எப்.சி.,யில் வேறென்ன என்ன என்ன சிறப்புகள் உள்ளது என பார்க்கலாம்.

இதுவரை 3500MT மட்டுமே இழுத்து சென்ற சரக்கு பெட்டிகள் - இந்த DFCல் 13500MT அதாவது 4 மடங்கு அதிகமாக சரக்குகளை இழுத்து செல்லும் வண்ணம் நவீன தண்டவாளங்களால் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 1டன்/ கி.மீ., க்கு 95 பைசா என்று இருந்த கட்டணம் - இந்த DFCஆல் 45 பைசாகவா குறையும் அதாவது பாதிக்கு பாதியாக குறையும். இதுவரை இருந்த 75kmph என்ற அதிகபட்ச வேகம் - இந்த DFCல் 100kmphஆக இருக்கும்.

இதுவரை 4 மீ உயரம் மட்டுமே உள்ள சரக்கு இரயில் - இந்த DFCல் 7.1மீ உயரமாக இருக்கும். இதனால் அதிக சரக்குகளை கொண்டு செல்ல முடியும். இதுவரை 700 மீட்டர் நீளத்தில் சென்ற சரக்கு ரயில்கள் - இந்த DFCல் 1500 மீட்டர் நிளத்திற்கு நீட்டிக்கபட்டு அனகோண்டா போன்று நீளமாய் செல்லும். இரயிலின் அகலமும் 10% அகலமாக்கபட்டுள்ளது. ஆக இந்த DFC திட்டம் இந்தியன் இரயில்வேயின் மணிமகுடம் என வர்ணிக்கப்படுகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!