தேனியில் 2 நாட்கள் குடிநீர் வினியாேகம் நிறுத்தம்: நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

தேனியில் 2 நாட்கள் குடிநீர் வினியாேகம் நிறுத்தம்: நகராட்சி நிர்வாகம் அறிவிப்பு
X

பைல் படம்.

தேனியில் இரண்டு நாள் குடிநீர் சப்ளை இருக்காது என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தேனியில் இரண்டு நாள் குடிநீர் சப்ளை இருக்காது என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து தேனி நகராட்சி கமிஷனர் வீரமுத்துக்குமார் கூறியதாவது: வைகை அணை சுத்திகரிப்பு நிலையில் இருந்து தேனிக்கு குடிநீர் வரும் குழாய் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.

எனவே இன்றும் (டிசம்பர் 15ம்தேதி) நாளையும் (டிசம்பர் 16ம் தேதி) குடிநீர் சப்ளை இருக்காது. டிசம்பர் 17ம் தேதி முதல் வழக்கம் போல் குடிநீர் சப்ளை இருக்கும் என்றார்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்