கடவுளே.. கடவுளே...ஓபிஎஸ் அணி புலம்பல்

கடவுளே.. கடவுளே...ஓபிஎஸ் அணி  புலம்பல்
திருமங்கலத்தில் முன்னாள் அமைச்சர் உதயக்குமார் ஆதரவாளர்கள் அச்சிட்டுள்ள போஸ்டர்.
திருமங்கலத்தில் ஒட்டப்பட்ட போஸ்டரை படித்து விட்டு கடவுளே.. கடவுளே. என்று தலையில் அடித்துக் கொள்கிறார்கள் ஓபிஎஸ் அணியினர்.

எடப்பாடி அணியினர் செய்த ஒரு வேலையால் தான் இப்படி தலையில் அடித்துக் கொள்கிறார்கள் அவர்கள். மாண்புமிகு அம்மா, கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடியார் ஆகியோர்களின் நல்லாசியுடன், மதுரை புறநகர் மேற்கு எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் கவி காசிமாயன், நர்மதா கவி காசிமாயன், அ. கொக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் அவர்களின் இல்ல காதணி விழாவிற்கு வருகை தரும் எங்கள் பாசமிகு அண்ணன் ஆர். பி. உதயகுமார், மதுரை மேற்கு மாவட்ட கழக செயலாளர் கழக அம்மா பேரவை செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் அவர்களையும் மற்றும் கழக முன்னாடிகள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறோம் .

மதுரை புறநகர் மேற்கு மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி ஊராட்சி தலைவர்கள் திருமங்கலம் ஒன்றியம் என்று அந்த போஸ்டரில் வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் அந்த போஸ்டரில், 14 நபர்களின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன .

அதிமுகவை தோற்றுவித்த எம்ஜிஆர் படம் அதில் இல்லை. அதிமுக கட்சியின் பெயரில் இருக்கும் அண்ணாவும் அந்த போஸ்டரில் இல்லை. எம்ஜிஆர் இளைஞர் அணி நிர்வாகிகள் என்று போஸ்டரில் அச்சடித்துள்ளனர். அதற்காகவாவது அந்த போஸ்டரில் எம்ஜிஆர் போட்டோவை வைத்திருக்கிறார்கள் என்றால் அதுவும் இல்லை. இதனால் தான் எடப்பாடி அணியின் இந்த போஸ்டரால் தான் ஓபிஎஸ் அணியினர் கடவுளே.. கடவுளே.. என்று தலையில் அடித்துக் கொள்கிறார்கள்.

இதற்கு,, எம்.ஜி.ஆர். இளைஞர் அணியாம்... புரட்சி தலைவர் படம் இல்லாமலே... அது சரி.. உதயகுமாரின் அடுத்த இலக்கு எம்ஜிஆர் தானோ...கடவுளே.. கடவுளே என்கிறார் ஓபிஎஸ் அணியில் இருக்கும் மருதுஅழகுராஜ். கட்சியின் நிறுவனத் தலைவர் படம் போடவில்லை என்றால் அவரின் கட்சியில் இவர்களுக்கு என்ன வேலை. சந்திரமுகி எம் ஜி ஆர் இருக்கும் பொழுது உண்மையான எம்ஜிஆர் படத்தை எப்படி போடுவார்கள். கலிகாலம் முத்தி போச்சு. எல்லோரையும் மருத்துவர் களிடம்தான் காண்பிக்க சேர்க்க வேண்டும். புரட்சி தலைவர், புரட்சி தலைவி இருவரையும் எடப்பாடியால் மறந்து விடுவார்கள். அண்ணன் கலியுக எம்ஜிஆர் தான் ஆல்ரெடி இருக்கிறாரே. புரட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி.... துணை புரட்சி தலைவர் உதயகுமார் என்று அதிமுகவினரை விளாசி வருகின்றனர்.

Tags

Next Story