சபரிமலை சீசன் முடியும் வரை கேரளா அடக்கியே வாசிக்கும்: விவசாயிகள் கருத்து

சபரிமலை சீசன் முடியும் வரை கேரளா அடக்கியே வாசிக்கும்: விவசாயிகள் கருத்து
X

பைல் படம்

கேரள மக்கள் எவ்வளவு சாதுர்யமானவர்களோ, தமிழர்கள் அதனை விட பல மடங்கு சென்டிமெண்ட் நிறைந்தவர்கள்

சபரிமலை சீசன் முடியும் வரை முல்லை பெரியாறு அணை விஷயத்தில் கேரளா சற்று அடக்கியே வாசிக்கும், அதிக சென்டிமெண்ட் காட்டும் எனவே தமிழக விவசாயிகள் ஏமாற்றம் அடைந்து விடக்கூடாது என சமூக ஆர்வலர்கள், தேனி மாவட்ட அரசியல் பிரமுகர்கள் எச்சரிக்கின்றனர்.

இது குறித்து தேனி மாவட்டத்தை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: முல்லை பெரியாறு அணையில் கேரளா முரண்டு பிடிப்பதும், இறங்கி வருவதும், மீண்டும் முரண்டு பிடிப்பதும் வாடிக்கையான விஷயம். அவர்களின் சூழலுக்கு ஏற்ப மாறிக்கொள்வார்கள். கடந்த முறை அணைக்குள் புகுந்து தண்ணீரை திறந்து விட்டு அடாவடி செய்தவர்கள், இப்போது வரவில்லை. இது தமிழக விவசாயிகளை பொறுத்தவரை முன்னேற்றம் என கருதப்படுகிறது. ஆனால் கேரளாவை பொறுத்தவரை இதுவே சாமர்த்தியம்.

காரணம் அங்கு சபரிமலை சீசன் தொடங்கி உள்ளது. உலகிலேயே மிக குறுகிய காலத்தில் அதிக பக்தர்கள் வந்து செல்லும் கோயிலாக சபரிமலை ஐயப்பன்கோயில் மாறி விட்டது. கொரோனாவிற்கு முந்தைய சில ஆண்டுகளில் சபரிமலை கோயிலுக்கு வந்த பக்தர்களின் கூட்டத்தை கண்டு உலகமே மிரண்டு போனது. அத்தனை கோடிப்பேர் ஆண்டுதோறும் வந்து செல்கின்றனர்.

இவர்களின் மூலம் பல லட்சம் கோடி ரூபாய் பணம் புரளும். பல ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைக்கும். இந்த பணத்தில் ஒரு ரூபாயினை கூட கேரள அரசோ, கேரள வியாபாரிகளோ இழக்க விரும்ப மாட்டார்கள். சபரிமலை சீசனில் அவர்களின் கவனம் முழுக்க சபரிமலை மீதே இருக்கும். இதர விஷயங்களை சற்று ஒதுக்கி வைப்பார்கள். அல்லது ஆறப்போடுவார்கள்.

கேரள மாநிலம் உப்புத்துறையில் வரும் 22ம் தேதி நடைபெற இருக்கும் ஆர்ப்பாட்டத்தில், தண்ணீர் தமிழர்களுக்கு, உயிர் கேரளத்தவர்களுக்கு' என்ற சென்டிமெண்ட் கோஷம் உருவானதே, இதன் அடிப்படையில் தான். இந்த ஒரு கோஷமே தமிழக விவசாயிகள் பலரை சென்டிமெண்ட் வளையத்திற்குள் சிக்க வைத்துள்ளது. காரணம் கேரள மக்கள் எவ்வளவு சாதுர்யமானவர்களோ, தமிழர்கள் அதனை விட பல மடங்கு சென்டிமெண்ட் நிறைந்தவர்கள். தமிழக விவசாயிகள் அளவற்ற இரக்க குணம் கொண்டவர்கள்.

எனவே, சபரிமலை சீசன் முடியும் வரை கேரளா தமிழர்களுக்கு எதிராக சென்டிமென்ட் தாக்குதலே நடத்தும். எனவே தமிழக விவசாயிகள் மிகவும் நிதானமாகவும், சாதுர்யமாகவும் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு கூறினர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil