நெம்மேலி கிராமத்தில் உலக மண்வள தினக் கொண்டாட்டம்

நெம்மேலி கிராமத்தில் உலக மண்வள தினக் கொண்டாட்டம்
X

மதுக்கூர் வட்டாரம், நெம்மேலி கிராமத்தில் உலக மண்வள தின கொண்டாட்டப்பட்டது.

மதுக்கூர் வட்டாரம், நெம்மேலி கிராமத்தில் உலக மண்வள தினம் கொண்டாட்டப்பட்டது.

உலகம் முழுவதும் கடந்த டிசம்பர் 5ஆம் தேதி முதல் மண்ணின் முக்கியத்துவத்தை அனைவரும் உணரும் வகையில் உலக மண்வள தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மண்வள தினம் குறிப்பிட்ட உறுதிமொழியுடன் வருகிறது.

இந்த ஆண்வுடு மண் என்பது உணவின் ஆரம்பம். என்ற முழக்கத்துடன் துவங்கி உள்ளது. இக்கருத்தினை விவசாயிகளுக்கு உணர்த்தும் வகையில் மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனரால் நெம்மேலி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சனி ராஜராஜன் உதவியுடன் உலக மண்வள தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மதுக்கூர் வேளாண் உதவி இயக்குனர் பேசுகையில், மண்வள தினத்தில் விவசாயிகளுக்கு நாம் உண்ணும் உணவு மண்ணில் இருந்து துவங்குகிறது. மண் விஷமின்றி மாசு இன்றி உயிர் உள்ளதாக இருந்தால்தான் அதிலிருந்து கிடைக்கும் உணவும் மாசின்றி விஷமின்றி இருக்கும். எனவே விவசாயிகள் இரசாயன உரங்களையும் பூச்சிக்கொல்லி களைகொல்லிகளையும் அதிக அளவில் பயன்படுத்தி நமது மண்ணை மாசுபடுத்தி நம்மையும் விஷமாக்கி வருங்கால சந்ததிக்கு தரமற்ற மண்ணை கொடுக்காமல் உயிர் உள்ளதாக ஆக்கிட இன்றைய தினம் உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதற்கு அனைத்து விவசாயிகளும் பயிரின் உணவு தேவையான தழை,மணி மற்றும் சாம்பல் சத்தினை அதிகமான விலையும் அரசுக்கு அதிக அந்நிய செலவாணியை ஏற்படுத்தும் ரசாயன உரங்கள் பயன்படுத்துவதை தவிர்த்து அவரவர் வீட்டில் உள்ள மாடுகள் தரும் சாணம் மற்றும் கோமியத்தை சரியான முறையில் மக்க வைத்து பதப்படுத்தி ஏற்ற நேரங்களில் பயன்படுத்துவதன் மூலம் விவசாயிகள் கடன் வாங்கி செலவு செய்யும் உரச் செலவை தவிர்க்கலாம்.

இயற்கை உரங்கள் உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம் பாஸ்போபாக்டீரியா மற்றும் பொட்டாஸ் மொபைலைசிங் பாக்டீரியா போன்றவற்றை பயன்படுத்தி தற்சார்புடன் இருக்க கேட்டுக் கொண்டார். மாட்டு கோமியத்தினை பக்குவப்படுத்தி இயற்கையான முறையில் களைக்கொல்லியாக பயன்படுத்துவதையும் விவசாயிகளுக்கு விளக்கி கூறினார்.

துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி மன்வள அட்டையின் உபயோகம் பற்றி எடுத்துக் கூறினார். வேளாண் உதவி அலுவலர் முருகேசன் உயிர்உரங்கள் மற்றும் நுண்ணூட்ட உரங்கள் 50 சத மானிய விலையில் வழங்கப்படுவது பற்றி எடுத்துக் கூறினார்.

அட்மா திட்ட அலுவலர் ராஜு பயிற்சியினை ஒருங்கிணைத்தார். வேளாண் உதவி இயக்குனர் மதுக்கூர் தலைமையில் அனைத்து விவசாயிகளும் மண்ணே உணவின் ஆரம்பம் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தற்சார்பு முறையில் இயற்கை உரம் பயன்படுத்துவதையும் மாசற்ற விஷமற்ற மண்ணை வருங்கால சந்ததிக்கு பாதுகாப்பாக வழங்குவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

நெம்மேலி ஊராட்சி மன்ற தலைவர் ரஞ்சனி ராஜராஜன் மண்வள தினத்திற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். முன்னோடி விவசாயிகள் பெரமையன் சேதுராமன் மற்றும் இருளப்பன் உள்ளிட்ட 40 க்கு மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
100% இத மட்டும் ஃபாலோ பண்ணுங்க.. ஒரே மாசத்துல 10,12 கிலோ எடை குறையலாம்..! ரொம்ப ஈஸியா..! | Easy weight loss diet plan in Tamil