கிராம மேலாண்மை குழு கூட்டம் : தளிக்கோட்டையில் வேளாண் துணை இயக்குனர் ஆய்வு..!

கிராம மேலாண்மை குழு கூட்டம் : தளிக்கோட்டையில் வேளாண் துணை இயக்குனர் ஆய்வு..!
X

 மதுக்கூர் வட்டாரம், தனிக்கோட்டையில் நடந்த கிராம மேலாண்மை குழு கூட்டம்.

மதுக்கூர் வட்டாரம், தளிக்கோட்டை கிராம மேலாண்மை கூட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் மற்றும் இடுபொருள்கள் வழங்கப்பட்டன.

தஞ்சை மாவட்டம், மதுக்கூர் வட்டாரம், தனிக்கோட்டையில் கிராம மேலாண்மை குழு கூட்டம் மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 50 சத மானிய விலையில் எம் டி யு -1ரக உளுந்து விதைகள் திரவ உயிர் உரத்துடன் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தளி கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மணிவண்ணன் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அண்ணாதுரை ஆகியோர் அடங்கிய கிராம மேலாண்மை குழு கூட்டத்தில் வேளாண் துணை இயக்குனர் அட்மா திட்டம் பால சரஸ்வதி கலந்து கொண்டார்.

அவர், தளிக்கோட்டை பஞ்சாயத்தில் 45 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கு தென்னை சார்ந்த அனைத்து தொழில்கள் தொடர்பான பயிற்சி வேப்பங்குளம் தென்னை ஆராய்ச்சி மையத்தில் ஏழு நாள் நடைபெறுவது குறித்து எடுத்துரைத்தார். இந்த பயிற்சியில் விருப்பமுள்ள விவசாயிகள் வேளாண் உதவி அலுவலரை தொடர்பு கொண்டு பதிவு செய்திடகேட்டுக் கொண்டார்.


மேலும் தனிக்கோட்டையை சேர்ந்த ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அண்ணாதுரைக்கு தேசிய மண்வள அட்டை இயக்கத்தின் கீழ் மண்மாதிரி முடிவு அறிக்கைகளை வழங்கினார். தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் உளுந்து சாகுபடி செய்வதற்கு விவசாயிகளுக்கு 50% மானியத்தில் எம்டிஏ 1 சான்று விதைகள் திரவ உயிர் உரம் ஆகியவற்றை அட்மா திட்ட வேளாண் துணை இயக்குனர் பால சரஸ்வதி வழங்கி தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து வேளாண் அலுவலர் கண்ணன், ஊராட்சி மன்ற தலைவர் மணிவண்ணன் துணை ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாதுரை மற்றும் வேளாண் அலுவலர் இளங்கோ துணை வேளாண்மை அலுவலர் அன்புமணி வேளாண் உதவி அலுவலர் ராமு ஆகியோரும் வழங்கினார்கள்.

வேளாண் உதவி இயக்குனர் திலகவதி கிசான் கடன் அட்டை பெறுவதற்கான முறைகள் பற்றி தேவைப்படும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினார். அட்மா திட்ட அலுவலர்கள் சுகிர்தா ராஜு அய்யா மணி ஆகியோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags

Next Story
ai solutions for small business