திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் போட்டியின்றி தேர்வு

திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் போட்டியின்றி தேர்வு
X

துணை சேர்மனாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்ட பத்மாவதி கிருஷ்ணராஜ் .

திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவராக பத்மாவதி கிருஷ்ணராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிப்பு.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் யூனியன் சேர்மனாக சுபா திருநாவுக்கரசு உள்ளார். துணை சேர்மனாக இருந்த திமுகவை சேர்ந்த கருணாநிதி கடந்த மார்ச் மாதம் தன்னுடைய துணை சேர்மன் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து துணைத் தலைவர் தேர்தல் இன்று தேர்தல் நடத்தும் அலுவலர் ராதாகிருஷ்ணன் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முருகன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த தேர்தலில் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியம் 3வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் திமுகவை சேர்ந்த பத்மாவதி கிருஷ்ணராஜ் என்பவர் மட்டும் வேட்புமனு தாக்கல் செய்திருந்ததால், பத்மாவதி கிருஷ்ணராஜ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!