குடும்ப அட்டைகளுக்கு தலா 2,000 வழங்கிய அரசு கொறடா

குடும்ப அட்டைகளுக்கு தலா 2,000 வழங்கிய அரசு கொறடா
X
திருவிடைமருதூர் தொகுதியில் ஆடுதுறை, சேங்கனூர், பந்தநல்லூர் ஆகிய இடங்களில் குடும்ப அட்டைக்கு ரூ 2000 வழங்கும் திட்டத்தை அரசு தலைமை கொறடா தொடங்கி வைத்தனர்.

நாடு முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவின் தாக்கத்தால் தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நடைமுறையில் இருந்து வருகிறது. கொரோனா காரணமாக வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ 4000 வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார். முதல் கட்டமாக ரூ 2000 வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் இன்று நடைமுறைப்படுத்தப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகாவில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் 2000 வழங்கும் திட்டத்தின் தொடக்க நிகழ்வினை திருவிடைமருதூர் ஆடுதுறை பந்தநல்லூர் சேங்கனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் மற்றும் தமிழக அரசின் தலைமை கொறடாவும் திருவிடைமருதூர் திமுக சட்டமன்ற உறுப்பினருமான கோவி.செழியன் தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், கொரோனாவின் தாக்கத்தால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் பொது மக்களுக்கு 2000 வழங்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாவட்டத்தில் உள்ள பொது வினியோக கடைகளில் காலை முதல் சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு க ஸ்டாலின் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 5 ஆயிரம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார் இதனையடுத்து கடந்த அதிமுக அரசு ரூ 1000 மட்டுமே வழங்கியது. தேர்தல் அறிக்கையாக திமுக தலைவர் ஸ்டாலின் திமுக வெற்றி பெற்றவுடன் கொரோனா நிவாரண நிதியாக ஜூன் 3 ஆம் தேதி 4000 வழங்கப்படும் என அறிவித்திருந்தார். மக்களின் நிலையை உணர்ந்து இன்று முதல் தமிழகம் முழுவதும் நிவாரண உதவியாக முதல் கட்ட தவணையாக 2000 வழங்கும் திட்டத்தை நடைமுறைப் படுத்தியுள்ளார். அத்தகைய திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ள முதலமைச்சருக்கு எங்களது தொகுதி சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கொரோனாவின் தாக்கத்தை உணர்ந்ததால்தான் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது எனவும், தமிழக முதல்வர் சுகாதாரத் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்டு உள்ளதால் வெளிநாடுகளிலிருந்து ஆக்சிஜன் வாங்கும் முடிவையும் அரசு மருத்துவமனைகளில் போதுமான வசதிகளை மேம்படுத்திட வகையில் நடவடிக்கைகளையும் மருத்துவமனைகள் அதிகப்படுத்தும் நடவடிக்கைகளிலும் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஊரடங்கு தீவிர படுத்துவதால் மட்டுமே கொரானாவின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும் ' அத்தகைய செயலில் தமிழக அரசு முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

Tags

Next Story