/* */

தஞ்சாவூரில் தடுப்பூசி தட்டுப்பாடு, 117 மையங்களில் ஊசிபோடும் பணி நிறுத்தம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று 117 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டது.

HIGHLIGHTS

தஞ்சாவூரில் தடுப்பூசி தட்டுப்பாடு, 117 மையங்களில் ஊசிபோடும் பணி நிறுத்தம்
X

தஞ்சாவூர் அண்ணா அரங்கத்தில் தடுப்பூசி பணி நிறுத்தம் என்று கூறி அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் தடுப்பூசி கையிருப்பு இல்லை எனவும், யாரும் டோக்கன் வாங்க வர வேண்டாம் என தடுப்பூசி மையங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதால் டோக்கன் வாங்க வந்த பொதுமக்கள் ஏமாற்றம்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 31,1,2 ஆகிய தேதிகளி தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது. இதனையடுத்து கடந்த 3 ஆம் தேதி ஒவ்வொரு மையத்திற்கும் 300 தடுப்பூசிகள் போடப்பட்டது,

நேற்றைய தினம் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 100 ம், 45 வயதிற்கு மேட்பட்டவர்களுக்கு 100 தடுப்பூசிகள் போடப்பட்டன. குறைந்தளவே டோக்கன் விநியோகம் செய்யப்பட்டதால், நேற்று ஏமாற்றத்துடன் திரும்பி சென்ற பொதுமக்கள் இன்று அதிகாலை முதலே டோக்கன் வாங்க வந்தனர்.

ஆனால் 117 மையங்களிலும் இரண்டு தடுப்பூசிகளும் கையிருப்பு இல்லை! நாளை வரக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது என மையங்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையின் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பொதுமக்களை திருப்பி அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 5 Jun 2021 3:00 AM GMT

Related News