திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்க சுவாமி திருக்கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி

திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்க சுவாமி திருக்கோவிலில் தைப்பூச தீர்த்தவாரி
X
திருவிடை மருதூரில் தீர்த்தவாரி கண்டருளினார் ஸ்ரீமகாலிங்க சுவாமி.
திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோவிலில் தைப்பூசத்தையொட்டி தீர்த்தவாரி பெருவிழா நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோயில் திருவாடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமானது. இந்த கோயிலில் தைப்பூச பெருவிழா மிகச் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டும் தைப்பூசத் பெருவிழாவை முன்னிட்டு கடந்த 9ஆம் தேதி ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோவில் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 8ம் நாள் வரை ஒவ்வொரு வாகனத்தில் ஸ்ரீ மகாலிங்க சுவாமி காட்சியளித்தார்.

இந்நிலையில் 9ம் திருநாளை முன்னிட்டு திருத்தேரோட்டம் அதிகாலை நடைபெற்றது. அதனை தொடர்ந்து 10ம் நாள் திருவிழாவாக தைப்பூச தீர்த்தவாரி பெருவிழாவில் காலை 11 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் காவிரி ஆற்றில் எழுந்தருளினர்.

இதனைத் தொடர்ந்து மதியம் 2 மணிக்கு மேல் தைப்பூசத் தீர்த்தவாரி திருவிழா நடைபெற்றது. இரவு வெள்ளிரதக் காட்சியும் நடைபெற்றது. தைப்பூசவிழா ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோயில் நிர்வாகிகள் செய்து இருந்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!