ஒலி பெருக்கி மூலம் போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்

ஒலி பெருக்கி மூலம்  போலீசார் விழிப்புணர்வு பிரசாரம்
X
திருவிடைமருதூர் சாலையில் நடந்து சென்றவர்களுக்கு போலீசார் முகக்கவசம் வழங்கி, ஒலிபெருக்கி மூலம் முழு ஊரடங்கு குறித்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

தமிழகம் முழுவதும் இன்று முதல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி பகல் 12 மணிவரை காய்கறி கடைகள் மற்றும் இறைச்சி கடைகள் மட்டும் செயல்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய தேவை இன்றி மக்கள் வெளியில் நடமாட கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூர் பகுதியில் அத்தியாவசியம் இன்றி வெளியில் சுற்றிய நபர்களுக்கு திருவிடைமருதூர் போலீசார் இலவசமாக முகக்கவசம் வழங்கி முழு ஊரடங்கு குறித்து ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.


அதில் இன்று முதல் வருகிற 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கானது கடைபிடிக்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் போலீசாருக்கு தகுந்த ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக் கொள்கிறோம் என ஒலிபெருக்கி மூலம் போலீசார் தெரிவித்தனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!