திருவிடைமருதூர் தாலுகாவில் வரும் 22 ல் மக்கள் நேர்காணல் முகாம்

திருவிடைமருதூர் தாலுகாவில்  வரும் 22 ல் மக்கள் நேர்காணல் முகாம்
X

பைல் படம்

திருவிடைமருதூர் வட்டம், கதிராமங்கலம்சரசம், திருலோகி கிராமத்தில் மக்கள்நேர்காணல் முகாம் நடைபெறுகிறது

பொதுமக்களின் குறைகளைஉடனுக்குடன் நிவர்த்தி செய்யும்பொருட்டு 1969 ஆம்ஆண்டு முதல் தமிழ்நாட்டில் ”மக்கள் தொடர்பு முகாம் ” என்ற திட்டம்தொடங்கப்பட்டு ஒவ்வொருமாதமும் 2-வது புதன்கிழமை நடைபெற்றுவந்தகு இதைத் தொடர்ந்து நடத்திடும் வகையில் தொடர்ந்து ” மக்கள் நேர்காணல் முகாம்” என்ற பெயரில் முகாம்கள் நடத்தப்படும் என கடந்த 22.08.2022-இல் தமிழக அரசு ஆணையிட்டது.

அதனைத்தொடர்ந்து, எதிர்வரும் 22.08.2023 (செவ்வாய்க்கிழமை) அன்று திருவிடைமருதூர் வட்டம், கதிராமங்கலம்சரசம், திருலோகிகிராமத்தில் ”மக்கள்நேர்காணல்முகாம்” நடத்திட உத்தரவிடப்பட்டுள்ளது.

மேற்படி ”மக்கள்நேர்காணல்முகாம்” பொதுமக்கள் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து தீர்வு பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் தீபக் ஜோக்கப் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களின் குறைகள் உடனடியாக தீர்க்கப்படவேண்டும் என்ற குறிக்கோளுடன் , மக்கள் தொடர்பு முகாம் திட்டம் 1969-ஆம் ஆண்டு இந்தியாவிலேயே முதல் முறையாக தமிழ்நாட்டில் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு மாதத்தின் இரண்டாவது புதன் கிழமை நடத்தப்படுகிறது.

மாவட்ட ஆட்சியரின் தலைமையில் ஒட்டுமொத்த மாவட்ட நிருவாகமும் ஒரு குழுவாக சென்று மக்களின் குறைகளுக்கு தீர்வு காண்பதோடு மட்டுமல்லாமல் இதர அரசு சேவைகளும் வழங்கப்பட்டு வருவதே இத்திட்டத்தின் சிறப்பு அம்சம் ஆகும்.

இம்முகாம்களை மேலும் பயனுள்ளதாக செயல்படுத்தும் நோக்கில்.

1) தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்),

2) வருவாய் கோட்ட அலுவலர்,

3) மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மற்றும்

4) மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர்

ஆகியோர் தலைமையில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களுக்கு மாதத்தின் இரண்டாவது புதன்கிழமை சென்று பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படுகிறது.

பெறப்பட்ட மனுக்கள் தொடர்புடைய துறைகளுக்கு அனுப்பப்பட்டு, அதன் மீதான இறுதி ஆணைகள் மக்கள் தொடர்பு முகாம் நாளன்று பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. அம்முகாம்களிலேயே முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகள், வீட்டுமனைப் பட்டா மற்றும் பட்டா மாறுதல் ஆணைகள் மற்றும் இதர அரசு நலத்திட்ட உதவிகள் அனைத்தும் வழங்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது