திருபுவனம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் புதிய குர்ஆன் பயிற்சி துவக்க விழா

திருபுவனம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் புதிய குர்ஆன் பயிற்சி துவக்க விழா
X

திருபுவனத்தில் நடந்த திரு குர்ஆன் பயிற்சி வகுப்பு

திருபுவனம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் புதிய குர்ஆன் பயிற்சி துவக்க விழா நடைபெற்றது.

திருவிடைமருதூர் அருகே திருபுவனம் ஜாமிஆ மஸ்ஜித் பள்ளிவாசலில் புதிய குர்ஆன் பயிற்சி மற்றும் மனன வகுப்புகள் துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு முத்தவல்லி ராஜ்முஹம்மது தலைமை வகித்தார். ஜமாஅத் நிர்வாகிகள் தாஜ்தீன், அலாவுதீன், ஹிபாயத்துல்லா, அன்சாரி, சேக் அலாவுதீன், அப்துல் மஜீத், நசீர் அகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இமாம் ஜமால் மைதீன் சிராஜி வரவேற்றார். கல்லிடைக்குறிச்சி பள்ளிவாசல் இமாம் அப்துல் ரஹ்மான் திருக்குர்ஆன் கிராஅத் ஓதினார். நீடூர் அரபிக்கல்லூரியின் துணை முதல்வர் முஹைதீன் அப்துல் காதர், கோடம்பாக்கம் மஸ்ஜித் ரஹிமியா இமாம் சதக்கத்துல்லா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டு பேசினர்.

குர்ஆன் பயிற்சி மற்றும் மனன வகுப்புகள் துவக்கப்பட்டன. குர்ஆன் பயிலும் மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் இமாம்கள் அப்துல்ஜமில், அப்துல் அஜீஸ், சிஹாபுதீன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நிறைவில் செயலாளர் அன்சாரி நன்றி கூறினார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!