திருவிடைமருதூர் காவிரி ஆற்றில் பச்சிளம் குழந்தை பிணமாக மிதந்து வந்ததால் பரபரப்பு

திருவிடைமருதூர் காவிரி ஆற்றில் பச்சிளம் குழந்தை பிணமாக மிதந்து வந்ததால் பரபரப்பு
X

பைல் படம்.

திருவிடைமருதூர் காவிரி ஆற்றில் பச்சிளம் குழந்தை பிணமாக மிதந்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் காவேரி ஆற்றில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக ஆங்காங்கே மழைநீர் குட்டை போல் தேங்கி கிடந்துள்ளது.

இந்நிலையில் இன்று காலை குட்டை நீரில் பிறந்து சில மாதங்களே ஆன குழந்தை ஒன்று அழுகிய நிலையில் மிதந்து கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் காவல் துறைக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்த திருவிடைமருதூர் போலீசார் விரைந்து வந்து குழந்தையை வெளியில் எடுத்து வைத்துள்ளனர்.

மேலும் குழந்தையை பரிசோதிக்க தஞ்சையிலிருந்து மருத்துவர் குழு வரவழைக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!