திருவையாறில் லாரி மோதிய விபத்தில் முதியவர் பலி

திருவையாறில் லாரி மோதிய விபத்தில் முதியவர் பலி
X
பைல் படம்
திருவையாறில் லாரி மோதிய விபத்தில் முதியவர் இறந்தார்.

திருவையாறு அடுத்த, மனகரம்பை ஊராட்சி, எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் பாக்கியம் மகன் செல்வம்(65). இவர் அப்பகுதியில் பாட்டில்களை சேகரித்து விற்பனை செய்து வந்தார்.

இரவு நேரத்தில் பைபாஸ் சாலை, சமயபுரத்தம்மன் நகரில் உள்ள சிமெண்ட் கடையின் வாசலில் படுத்து இருந்தார். இந்ந்நிலையில் நேற்று இரவு, பைபாஸ் சாலை போடுவதற்காக கிராவல் ஏற்றி வந்த லாரி, நிலை தடுமாறி சிமெண்ட் கடை மீது மோதி கவிழ்ந்தது.

இதில், கடையின் வாசலில் படுத்திருந்த முதியவர் செல்வம் சம்பவ இடத்திலேயே பலியானார். யஇதுகுறித்து தகவலறிந்த நடுக்காவேரி போலீசார், வழக்கு பதிந்து, தப்பியோடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!