தஞ்சாவூர்: நாற்றங்கால் தயாரிக்கும் பணி தீவிரம்
மேட்டூர் அணை ஜூன்12ம் தேதி திறக்க உள்ள நிலையில், குறுவை சாகுபடிக்காக பாய் நாற்றங்கால் தயார் செய்து, வெளியூருக்கு விற்பனைக்காக அனுப்பு பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.
மேட்டூர் அணையிலிருந்து, ஜூன் 12ம் தேதி, குறுவை சாகுபடிக்காகத் தண்ணீர் திறப்பதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதையொட்டி, டெல்டா மாவட்டங்களில், குறுவை சாகுபடிக்கான நாற்றங்கால்கள் தயாரிக்கும் பணிகள் முழுவீச்சில் விவசாயிகள் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நிலத்தடி நீர் ஆதாரமும், பம்ப்செட் வசதியுள்ளவர்கள் ஆற்று நீரை மட்டுமே நம்பியுள்ள விவசாயிகளுக்கும் சேர்த்து நாற்றங்கால் தயாரிக்கும் விதமாக, டெல்டாவில் சமுதாய நாற்றங்கால் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, குறுவைக்காக 300 ஏக்கருக்கு தேவையான இயந்திரத்தில் நடவு செய்வதற்காக பாய் நாற்றங்கால், தயாரிக்கப்பட்டு, வெளியூருக்கு விற்பனையாக அனுப்பும் பணியும் முழுவீச்சில் நடந்து வருகின்றன.
இதுகுறித்து தஞ்சாவூர் அடுத்த களிமேடு கிராமத்தில் பாய் நாற்றங்கால் தயாரித்து வரும் விவசாயி குமார் கூறுகையில்; கடந்த 2006ம் ஆண்டு முதல் பாய் நாற்றங்கால் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். சுமார் 1,200 ஏக்கரில் நடவு செய்வதற்குரிய பாய் நாற்றங்கால் தயாரிக்கிறோம். இதில், இதுவரை குறுவைக்கு தேவையான கோ–51, ஏ.எஸ்.டி.16, போன்ற ரக நெல்களை, சுமார் 300 ஏக்கர் நடவுக்கான நாற்றங்கால்கள் கொடுத்துவிட்டோம். தண்ணீர் திறப்பு அறிவிப்புகள் வந்த நிலையில், ஆர்டர்கள் வந்துக்கொண்டு இருக்கிறது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu