தஞ்சையில் கொரோனா நோயாளிகளுக்கு 2.5 டன் வாழை பழத்தை வழங்கிய விவசாயி
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த வடுகக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன்,49,. வாழை விவசாயி தஞ்சாவூர் மாவட்ட வாழை உற்பத்தியாளர் சங்க தலைவராகவும் உள்ளார்.
இவர் தனது வாழைத்தோப்பில் உற்பத்தியான, 2.5 டன் அளவிலான, 50 ஆயிரம் பூவம் வாழை பழத்தை, தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்காக இலவசமாக வழங்க, தோட்டகலை துறை உதவி இயக்குநர் கலைசெல்வன், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் பொறுப்பு நாமச்சிவயத்திடம் ஒப்படைத்தார். அதை உழவர் சந்தையில் உள்ள குளிர்பதன கிடங்கில் வைத்து, தினமும், 2 ஆயிரம் பேருக்கு பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது குறித்து மதியழகன் கூறுகையில் கடந்த சில நாள்களுக்கு முன்பாக பெய்த கோடை மழையாலும், ஊரடங்கு எதிரொலியாலும் எங்கள் பகுதியில் பயிரிடப்பட்ட வாழைகள் வீணாகி வருகிறது.
இதனால் மரத்திலேயே குருவிகள், காக்கைகள் கொத்தி தின்று வருகிறது. இப்படியாக பழங்கள் வீணாவதை விட, யாருக்காவது பயன்படும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக, கொரோனா நோயாளிகளுக்கு வாழை பழத்தை வழங்க முடிவு செய்து வழங்கினேன்.
இதை போல, கடந்த ஆண்டும் கொரோனா நோயாளிகளுக்காக 1.8 டன் வாழையை வழங்கினேன் என அவர் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மருத்துவகல்லுாரி மருத்துவமனையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று நோயாளிகளுக்கு நாள்தோறும் வழங்கும் வகையில், 2.5 டன் அளவிலான வாழை பழங்களை இலவசமாக விவசாயி ஒருவர் வழங்கியுள்ளதை பலரும் பாராட்டி வருகி்ன்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu