சாவிலும் இணை பிரியாத தம்பதிகள்

சாவிலும் இணை பிரியாத தம்பதிகள்
X

மனைவி இறந்த சோகத்தில் இருந்த கணவர் அடுத்த சில மணி நேரத்தில் உயிரிழந்தார். இந்த தம்பதிகள் இருவரும் வாழ்நாளில் இணை பிரியாமல் வாழ்ந்து வந்ததை போல் சாவிலும் இணை பிரியாமல் இயற்கை எய்தி உள்ளனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே அம்மன்பேட்டை வெள்ளாள தெருவைச் சேர்ந்தவர் திருவேங்கடம்,80. இவரது மனைவி அம்சவள்ளி,78. கணவன்-மனைவி இருவரும் இணைபிரியாது வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு 5 மகன்கள் 2 மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் வயது முதிர்வின் காரணமாக அம்சவள்ளி நேற்று மாலை உயிரிழந்தார். சோகத்தில் இருந்த அவரது கணவர் திருவேங்கடம் மிகுந்த கவலையுடன் அழுதுகொண்டிருந்த இருந்தார். தந்தையின் அழுகை சத்தம் கேட்கவில்லை என அவரது மகன்கள் பார்த்தபோது அவரும் இறந்த தெரியவந்தது. இந்த தம்பதிகள் இருவரும் வாழ்நாளில் இணை பிரியாமல் வாழ்ந்து வந்ததை போல் சாவிலும் இணை பிரியாமல் இயற்கை எய்தி உள்ளனர். இச்சம்பவம் உறவினர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!