நவ 4 ல் தொடங்கும் நடப்போம் நலம் பெறுவோம் திட்டம்: தஞ்சை ஆட்சியர் ஆலோசனை

நவ 4 ல் தொடங்கும் நடப்போம் நலம் பெறுவோம் திட்டம்: தஞ்சை ஆட்சியர் ஆலோசனை
X

நவ 4 ல் முதல்வர் தொடங்கி வைக்கும் நடப்போம் நலம் பெறுவோம் திட்டம்தொடர்பாக தஞ்சை ஆட்சியர் தீபக் ஜேக்கப் ஆலோசனை நடத்தினார்

நவ 4 ல் முதல்வர் தொடங்கி வைக்கும் நடப்போம் நலம் பெறுவோம் திட்டம்தொடர்பாக தஞ்சை ஆட்சியர் ஆலோசனை நடத்தினார்

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் நடைப் பயிற்சியை ஊக்குவிக்கும் வகையில் நடப்போம் நலம் பெறுவோம் (HEALTH WALK ) நடைபயணத்திற்கான முன்னேற்பாடு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தலைமையில் இன்று (02.11.2023) நடைபெற்றது.

தஞ்சாவூர் மாவட்டத்தில்; நடைபயிற்சியைஊக்குவிக்கும் வகையில் நடப்போம் நலம் பெறுவோம் (HEALTH WALK) நடைபயணம் வருகின்ற 04.11.2023 சனிக்கிழமை காலைஅன்னைசத்யா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளதையொட்டி முன்னேற்பாடு கூட்டம் நடைபெற்றது.

“நடப்போம் நலம் பெறுவோம்”எனும் நோக்கில் தமிழ்நாட்டில் உள்ளஅனைத்துமாவட்டங்களிலும் 8 கிலோ மீட்டர் தூரம் கொண்டநடைபாதைகள் கண்டறியப்பட்டு,பிரதிமாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை அன்று நலவாழ்வு பேணுவதற்கான நடைபயிற்சியை (HEALTH WALK) ஊக்குவிக்கும் வகையில் நடைபாதைகள் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் தரவுகளின் படி, உடற்பயிற்சி செய்வது சர்க்கரை மற்றும் இரத்த அழுத்த நோய்களின் தாக்கம் 28 சதவீதமும், இதய நோயின் தாக்கம் 30 சதவீதமும் குறைகின்றது என்று அறியப்படுகின்றது. நடைபயிற்சியானது மக்களை சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமான எடையுடன் இருக்கவும் நாள்பட்ட உடல் பிரச்சனைகள் மற்றும் மனஅழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.

எனவே தஞ்சாவூர் மாவட்டத்தில், “நடப்போம் நலம் பெறுவோம்” என்பதற்கு இணங்க பொது மக்களின் நலன் மற்றும் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு,எட்டு கிலோமீட்டர் தூரம் கொண்ட நடைபாதை கண்டறியப்பட்டுள்ளது. இந்த நடைபாதையானது 4 கிலோமீட்டர் தூரம் கொண்ட அன்னைசத்யா விளையாட்டரங்கம் முதல் முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி அரங்கம் தஞ்சாவூர் மாநகராட்சி வரை 1 முழு சுற்று சுற்ற 8 கிலோ மீட்டர் தொலைவானது தொடங்கிய இடத்திலேயே முடிகின்றது.

ஒவ்வொருமாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமைஉள்ளூர் மக்களுடன் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மாவட்ட அலுவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் ஆகிய அனைவரும் சுகாதார நடைபயிற்சியில் பங்கேற்பார்கள். நடை பயிற்சியின் போது ஆரோக்கியமான வாழ்க்கை மற்றும் நல்வாழ்வு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் மற்றும் தினந்தோறும் நடைபயிற்சி மேற்கொள்ள ஊக்குவிக்கப்படும்.

இதற்கான தொட க்க விழா 04.11.2023 சனிக்கிழமை அன்று காலை 6.00 மணிக்கு தமிழக முதலமைச்சர் காணொளி மூலம் சென்னையில் தொடக்கி வைக்கப்படவுள்ளது.

அதுசமயம், தஞ்சாவூர் மாவட்டத்தில் பாரளுமன்றஉறுப்பினர்கள், மாநிலங்களவை உறுப்பினர் கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தஞ்சாவூர் மாநகரட்சி ஆணையர், மேயர், துணைமேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். மேலும் நடை பயணம் (HEALTH WALK) அன்னை சத்யா விளையாட்டரங்கில் தொடங்கப்படும். இதில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என்று மாவட்டஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்தார்.

இக்கூட்டத்தி ல்தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் இரா. மகேஸ்வரி,துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் மரு. பா. கலைவாணி, மாநகரநல அலுவலர் மரு. சுபாஷ் காந்திமற்றும் பலர் கலந்துக் கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!